
பத்துமலையில் இந்திய கலாச்சார மையம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்
பத்துமலை, ஜன.19-
பத்துமலை திருத்தலத்தில் இந்திய கலாச்சார மையம் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
அதிகாரப்பூர்வமாக திறப்புவிழா கண்டது.
இந்த கலாச்சார மைய திறப்பு விழா நிகழ்வு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பத்துமலை இந்திய கலாச்சார மையத்தில் தமிழர் பாரம்பரியத்தை நினைவுகூறும் வகையில் மிருதங்கம், வயலின், தபேலா உள்ளிட்ட பல கருவிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கலாச்சார மையத்தில் தெய்வ சிலைகளும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும்
இந்தியர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்தை நிறுவிய தான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான நிர்வாகத்தை தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ சரவணன் இருவரும் பாராட்டினர்.
பத்துமலையை மலேசியாவின் அடையாள சின்னமாக உயர்த்தியவர் தான்ஸ்ரீ நடராஜா என்பதில் துளியளவும் சந்தேகமில்லை என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ் ச. விக்னேஸ்வரன் கூறினார்.
ஒரு காலத்தில் எப்படியோ இருந்த பத்துமலை தற்போது அபரீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், தான்ஸ்ரீ நடராஜா மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். தூற்றுபவர்கள் தூற்றட்டும், போற்றுபவர்கள் போற்றட்டும் என்ற நிலையில் தான்ஸ்ரீ நடராஜா தொடர்ந்து தனது பணியை மேற்கொண்டு வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பத்துமலையில் 140 அடி முருகன் சிலை இன்று மலேசியாவின் அடையாளமாக உள்ளது. இந்திய கலாச்சார மையம் அமைந்துள்ளது.
அடுத்து பத்துமலையின் மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய மாபெரும் மண்டபம் என்று பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் சமுதாய மக்களுக்கு பயன் தரும் திட்டங்களாகும். இதனால் தான்ஸ்ரீ நடராஜா பயன்பெற போவதில்லை. ஆகையால், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் தான்ஸ்ரீ நடராஜாவுக்கு மஇகா உறுதுணையாக இருக்கும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாக்குறுதி வழங்கினார்.
இந்த நிகழ்வில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன், தான்ஸ்ரீ நடராஜா, மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார், ம.இ.கா தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



