
ஈப்போ லாஹாட் ஸ்ரீ மகாலட்சுமி அம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஈப்போ,ஜன.12-
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ மகாலட்சுமி அம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
முதல் நாள் 9 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு பூர்வாங்க விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. அதனுடன், மாலை 5.30 மணிக்கு: முதலாம் கால
ஹோமம் தொடங்கியது.
மேலும், மாலை 6.30 மணிக்கு:
மகாபூர்ணாஹுதி இடம்பெற்றது.
தொடர்ந்து மாலை 6.40 மணிக்கு:
மூலாலய பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திக்கு
மகா அபிஷேகம் இடய்பெற பக்தர்கள் புடை சூழ மகாலட்சுமி பெருமாளை தரிசனம் செய்தனர்
மறுநாள் வைகுண்ட ஏகதாசியன்று அதிகாலை 3:30 மணிக்கு மகாபூர்ணாஹூதி கடம் புறப்பாடு கும்ப தீர்த்த புரோக்ஷ்ணம் நடைபெற்றது.
அதனுடன், காலை 5.30 மணிக்கு:
கோ பூஜை மற்றும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதனிடையே இந்த பூஜையில் பங்கற்ற பக்தர்களுக்கும் நிதியாகவும் பொருளாகவும் ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் ஆலய செயலாளர் பூமதி தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.
மேலும் ஈப்போவில் அமைந்திருக்கும் ஒரே மகாலட்சுமி பெருமாள் ஆலயம் இது தான் என்றார்.
,இந்த வைகுண்ட ஏகாதசிக்கு ஈப்போ கிந்தா சமூக,கலை கலாச்சாரம், விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி.யுவராஜ் சிறப்பு வருகை புரிந்தார்.



