Malaysia

பேராக் மாநிலத்தில் இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவி அறிக்கை வெளியிடப்பட்டது

ஈப்போ, டிச.28-
பேராக் மாநிலத்தில் இவ்வாண்டில் இந்திய இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீக்கியர்களுக்கு மாநில அரசு நிதியுதவி வழங்கி உதவியதாக பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, மனிதவளம், சுகாதாரம். ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் பேராக் மாநில இந்திய இயக்கங்கள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் உயர்கல்விகூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி பற்றிய அறிக்கை விளக்க கூட்டமாகும். இதில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கிய நிதியாக பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு மத்திய அரசு வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு 9.1 மில்லியன் ரிங்கிட் இந்திய ஆலயங்களுக்கும், 1.9 மில்லியன் ரிங்கிட் சீக்கிய ஆலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆனால், பேராக் மாநில அரசு இந்துகளுக்கு4.5 மில்லியன் ரிங்கிட்டும், 5 இலட்சம் ரிங்கிட் சீக்கியர்களுக்கும், 1 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிதி மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக, ஆலய நிர்வாகத்திற்கு; உயர்கல்வி மாணவர்களுக்கு; இயக்கங்களுக்கு ,தமிழ்ப்பள்ளிகளுக்கு முறையாக சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் சி.வசந்தி, மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவானி மற்றும் ஜெலுப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா போ இன், தலைமையாசிரியர் கள், துணை தலைமையாசிரிர்கள், ஆசிரியர்கள், இயக்கங்களின் தலைவர்கள், ஆலயத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button