தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்கள் நலனுக்காக தோட்டத்தில் தரை வீடுகள், PRR வீடுகள்
சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 5 தோட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்
தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

ஷா ஆலம்,பிப்.20- சொன்ன வாக்குறுதியை செய்த மந்திரி பெசார் என்று பெயர் பெற்றுள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிலாங்கூர் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒத்துழைப்பில் தோட்டத்தில் தரை வீடுகள் மற்றும் PRR வீடமைப்பு திட்டத்தை உருவாக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் உறுதி்பூண்டுள்ளது.
கோல சிலாங்கூர் தோட்டப்பகுதியில் பணிபுரியும் மற்றும் குடியிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொது வீடுகள் கட்டும் திட்டம் கோலகுபு பாரு இடைத்தேர்தல் வாக்குறுதியாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கியிருந்தார். அந்த வகையில்
மக்கள் குடியிருப்புத் திட்டத்தின் (பிஆர்ஆர்) கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது நிலத்தை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தோட்ட முதலாளிகளுடன் தொடங்கப்பட்டுள்ளன என்று டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.
“நம்மில் பலர் பெரிய தோட்டங்களைப் பார்க்கிறோம், அங்கே பல இந்தியத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். பெரிய தோட்ட முதலாளிடம் கொஞ்சம் நிலம் கொடுத்து பேரம் பேச ஆரம்பித்த நிலையில் அது தர போது வெற்றியளித்துள்ளது. தோட்ட மக்களுக்கு வாழ ஒரு கண்ணியமான வீடு கிடைக்கும் வகையில் அதை மேம்படுத்த நாங்கள் உதவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிஆர்ஆர் ஹார்மோனி மதானி பெஸ்தாரி ஜெயா திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மந்திரி பெசார் அவ்வாறு கூறியிருந்தார்.
பிபிஆர் ஹார்மோனி மதானி பெஸ்தாரி ஜெயா வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 75 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமாக வசதியான வீடுகளைப் பெற உதவுவது மாநில அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
கோல சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா பகுதியில் வசிக்கும் 245 தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்த வீடு கனவு திட்டமான பிபிஆர் ஹார்மோனி மதானி பெஸ்தாரி ஜெயா வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த PPR வீடுகள் லோட் 25 சுங்கை திங்கி தோட்டத்தில் 8.09 ஹெக்டேரில் மூன்று படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்ட 1,200 சதுர அடியில் தரைவீடுகள் கட்டுவதை் அத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
இந்த ஹார்மோனி மடானி பெஸ்தாரி ஜெயா மக்கள் குடியிருப்பு திட்டத்தின் வீடு மாதிரியை பார்த்த மக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தத் திட்டமானது 24 மாதங்களில் 750 சதுர அடி பரப்பளவில் 245 அடுக்கு மாடி வீடுகளைக் கொண்டுள்ளது.
PRR ஹார்மோனி மடானி பெஸ்டாரி ஜெயாவின் ஒரு யூனிட் தரை வீட்டின் விலை RM300,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி வீட்டின் விலை 45,000 ஆயிரம் வெள்ளி என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு திட்டம் மேரி தோட்டம், நைகல் கார்டனர், புக்கிட் தாகர், சுங்கை திங்கி மற்றும் மிஞ்சாங் தோட்டம் ஆகிய ஐந்து தோட்டங்களை உள்ளடக்கிய வீட்டு கட்டுமானத் திட்டமாகும். இந்த பிரச்சினை 1998 தொடங்கி கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக நீடித்த நிலையில் தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முயற்சியில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியையும் உரிமைகளையும் கெஅடிலான் கட்சி தொடர்ந்து பாதுகாக்கும். ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதுதான் கட்சியின் பலம். மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெறுவதற்கு இந்த விவகாரம் மக்கள் நீதி கட்சியின் முதுகெலும்பாக அமைகிறது என்றால் அது மிகையில்லை.



