
Uncategorized
தெலுக் இந்தான் லங்காப் பட்டணத்தில் நாட்டின் 16 ஆவது பொது தேர்தல் விளக்க கூட்டம்
தெலுக் இந்தான்,பிப்.18-

நாட்டின் 16 ஆவது பொது தேர்தல் சந்திக்கும் பொருட்டு பாசீர் சாலாக் நாடாளமன்ற தொகுதிக்கான
அரசியல் விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் சக்தி கட்சி பாசீர் சாலாக் தொகுதி தலைவ லெட்சுமணன் வடிவேலு கூறினார்.
முன்னாள் பாசீர் சாலாக் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ராமான் அவர்கள் ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் லங்காப் பட்டணம் தெலுக் இந்தான் நகராண்மை கழகமண்டபத்தில் நடைபெறும் என்றார். மலேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் தவறாது வருகை தந்து அண்மைய அரசியல் தகவல்களை பெற அவர் கேட்டு கொண்டார்.





