Malaysia

Bandar Saujana Putra ம.இ.கா கிளை ஏற்பாட்டில் பொங்கல் உதவிப்பொருள் வழங்குதல் மற்றும் சுகாதாரச் பரிசோதனை முகாம் சுற்று வட்டார மக்கள் கலந்து கொள்ள அழைப்பு

ஷா ஆலம்,ஜன.3-
சிலாங்கூர், Bandar Saujana Putra ம.இ.கா கிளை ஏற்பாட்டில் நாளை ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை பொங்கல் உதவிப்பொருள் வழங்குதல் மற்றும் சுகாதாரச் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனவரி ஐந்தாம் நாள், பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை மணி 4 வரை Dewan Rumah Pangsa BSPயில் நடைபெறவுள்ளது.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு, இவ்வாட்டரத்தில் உள்ள 50 பேருக்கு பொங்கல் வைப்பதற்கான பால், சர்க்கரை, பானை உள்ளிட்ட அடிப்படை பொருள்களையும் வழங்கவுள்ளனர். ஆகையால், இந்நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ முகாமிற்கு அனைவரும் வருகை தந்து பயனடையுமாறு சிலாங்கூர் மாநில ம.இ.கா செயலாளர் SASITHARAN அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சி மக்களுக்கு பயனள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் சுற்று வட்டார மக்கள் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேல்விவரங்களுக்கு 010-896 3910 அல்லது 011-60976209 என்ற எண்ணில் தொடப்புக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button