
நன்மைகளை விதைத்து தீமைகளை களையேடுப்போம்” பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு சோமு பொங்கல் வாழ்த்து
பினாங்கு,ஜன.9-
பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு சோமு மலேசிய இந்துக்களுக்கு தமது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உழவர்களின் உன்னத திருநாளான பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் கொண்டாடி மகிழும் அதேவேளையில் அதன் நோக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும். அப்போதுதான் பொங்கல் திருநாளை பொருள்பட கொண்டாட முடியும் என்று தமது வாழ்த்து செய்தியில் டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு கேட்டுக் கொண்டுள்ளார்.
பொங்கல் திருநாளில் நன்மைகளை விதைத்து தீமைகளை களையேடுப்போம்.
பொங்கல் பானையில் பால் பொங்கி வருவது போல் அனைவருக்கும் வாழ்க்கையில் வளம் பெருகட்டும். மீண்டும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு சோமு தெரிவித்துக் கொண்டார்.



