
கலைஞர் பாரதி கண்ணா சரிந்து விழுந்து மரணம் இறுதிச்சடங்கு செலவுகளை மனிதநேய மாமணி லத்னவள்ளி அம்மையார் ஏற்றுக் கொண்டார்
கோலாஙம்பூர்,ஜன.15-
ரசிகர்களை கடைசி வரையில் பாடல் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்த கலைஞர் பாரதி கண்ணா பாடல் பாடிக் கொண்டிருந்த போது கண்ணா கீழே சரிந்து விழுந்து பிறகு மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் பாரதி கண்ணாவின் திடீர் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று கலைஞர்களின் காவலர், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் கூறினார். பாரதி கண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அம்மா ரத்னவள்ளி இறுதி சடங்கிற்கு நிதியுதவி வழங்கி செலவுகளை ஏற்றுக் கொண்டார்.
இத்துயரச் சம்பவம் தான்ஸ்ரீ சோமா அரங்கில் சனிக்கிரமை இரவு 11 மணியளவில் நிகழ்தது. இச்சம்பவத்தின் போது பாரதி கண்ணா “பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு” பாடலை பாடி முடித்தவுடன் திடீரென்று பின்புறமாக சரிந்து விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் அவரை உடனடியாக பெட்டாலிங் ஜெயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரதி கண்ணா மாரடைப்பு காரணமாக மரணமடைந்த்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாரதி கண்ணாவின் நல்லுடல் திங்கட்கிழமை நண்பகல் செராஸ், ஜாலான் குவாரி மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, பாரதி கண்ணாவின் மறைவு குறித்து மிகுந்த கவலை தெரிவித்த மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் அவரது இறுதி சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார். பாரதி கண்ணா இறுதி மூச்சு உள்ளவரை ரசிகர்களை மகிழ்வித்ததாக ரத்னவள்ளி அம்மையார் தெரிவித்தார்.



