
கிந்தா இந்தியர் சங்கத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் டத்தோ ஆர்.சுரேஸ் குமார் தகவல்
ஈப்போ,ஜன.30-
கிந்தா இந்தியர் சங்கத்தின் 2025 பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார்.
ஈப்போ, ஜன.30-
முதல் முறையாக கிந்தா இந்தியர் சங்கத்தில் காலடி எடுத்து வைத்து, அச்சங்கத்தின் இவ்வாண்டின் முதல் நிகழ்வான பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு பின் இப்பொங்கல் நிகழ்வை தொடக்கி வைத்த பெருமையால் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமரின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு மேலதிகாரி டத்தோ ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பொங்கல் விழாவை தொடக்கி வைக்க அழைப்பு வழங்கிய கிந்தா இந்தியர் சங்கத்தின் நிர்வாகத்திற்கு அவர் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் நான் மதித்துவரும் இச்சங்கத்தின் அறங்காவலருமான டத்தோ எம்.கருத்துவுடன் அருகாமையில் அமர்ந்து பேசும் பாக்கியம் கிட்டியதற்கு இறைவனுக்கு நன்றி. அவர் இந்நாட்டு இந்தியர்கள் மற்றும் காற்பந்து விளையாட்டின் சகாப்தம். பல முறை அவரை கண்டு பேச வேண்டும் எண்ணம் இருந்தது. அதனை கிந்தா இந்தியர் சங்கம் நிறைவு செய்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தற்போது இச்சங்கம் டத்தோ ஆர்.தங்கராஜா தலைமையில் மிகவும் சிறப்பாக இயங்கி வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றேன். இச்சங்கம் மென்மேலும் அதிகப்படியான மக்கள் மேம்பாட்டு நிகழ்வுகள் மற்றும் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக நானும் உதவிகள் செய்ய தயாராக உள்ளதாக அவர் கருத்துரைத்தார்.

கிந்தா இந்தியர் சங்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இச்சங்கம் மீண்டும் காற்பந்து விளையாட்டுத் துறையில் சரித்திரம் படைக்க வேண்டும். அதற்கான தகுதியானவர்கள் இச்சங்கத்தில் பலர் இருந்து வருகின்றனர். மீண்டும் சரித்திரம் படைப்போம் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வில், கிந்தா இந்தியர் சங்கத் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா, பிரதமரின் சிறப்பு மேலதிகாரி ஆர்.சுரேஸ்குமாரை சிறப்பு செய்து கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



