
வெள்ளிரதம் வீதி உலா வந்து பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது வெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் திரண்டனர்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,பிப்.10-
பத்துமலையில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிரதம் வீதி உலா வந்து பிற்பகலில் பத்துமலை திருத்தலம் வந்தடைந்தது.
வெள்ளிரதம் பவனி வரும் வழி நெடுகிலும. பக்தர்கள் பசி-தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்ட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வெள்ளிரதம் முன்னும் பின்னும் கிட்டதட்ட ஒன்றரை பக்தர்கள் நடந்து வந்தனர்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடலாஜா தலைமையில் பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு வெள்ளிரதம் புறப்பட்டது.
வெள்ளிரதம் வழக்கமான சாலைகள் வழியாக பவனி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். வெள்ளிரதம் பவனி வந்த வழி நெடுகிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் பசி-தாகம் தீர்க்கப்பட்டது.
வெள்ளிரதம் பவனி வந்த சமயத்தில் முக்கிய இடங்களில் முக்கிய அமைப்புகள் தண்ணீர் பந்தல் அமைத்திருந்தது. இதில் ம.இ.கா தலைமையகத்தில் போடப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் கவனத்தை ஈர்த்திருந்தது. ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவரது துணைவியார், ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், அவரது துணைவியார், ம.இ.கா உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநிலம், தொகுதி, கிளை தலைவர்கள் மற்றும் ம.இ.கா தலைமையக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.



