Malaysia

பக்தி மணம் கமழ தைப்பூசம் கொண்டாடுவோம் இந்துக்களுக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தைப்பூச வாழ்த்து

கோலாலம்பூர், பிப்.11-
பக்தி நெறியொடு சமய சடங்குகளுக்கு உட்பட்டு பக்தி மணம் கமழ தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்துக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்த தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் பக்தி மணம் கமழ, சமய சடங்குகளுக்கு உட்பட்டு தைப்பூசத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்று தைப்பூச வாழ்த்து செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்துக்கள. முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் கலாச்சார திருவிழாவான தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். தைப்பூசம் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவை பக்தி நெறியுடன் சமய சடங்களுக்கு ஏற்ற வகையில் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் என்று தான்ஸ்ரீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைப்பூசத் திருவிழா இந்துக்களின் முக்கியமான சமய விழாவாகும் என்பதால் இதனை பக்தி நெறியோடு கொண்டாட வேண்டியது நமது கடமையாகும்.

மலேசிய இந்துக்களின் மிகப்பெரிய ஆண்டு விழா தைப்பூசம். இந்த தைப்பூசம் மலேசியாவில் உள்ள முக்கிய முருகன் திருத்தலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவை பொருத்தவரையில் பத்துமலை தைப்பூசத்திற்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். தொடர்ந்து பினாங்கு, கெடா, ஜொகூர் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய இடங்களில் இருக்கும் ஆலயங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெள்ளிரத ஊர்வலத்தின் போது பலரும் தண்ணீர் பந்தல் போட்டு பக்தர்களின் தாகம் தீர்த்துள்ளனர். ம.இ.காவும் தலைமையகம் அருகில் தண்ணீர் பந்தலை போட்டு பக்தர்களுக்கு உணவும் பானமும் வழங்கினோம். இந்த வேளையில் தண்ணீர் பந்தல் போட்ட அவர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தைப்பூச விழாவை மரபு கோணாமல் இந்துக்கள் அனைவரும் கொண்டாட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button