Malaysia

சவால்களை‌‌ கடந்து தலை நிமிர்ந்து நிற்கும் ஈப்போ கருடா சங்கம் வி.கிருஷ்ணன் உற்சாகமான உரை

ஈப்போ,மார்ச் 16-
ஓட்டப் பந்தைய துறை என்பது விளையாட்டு துறை மட்டுமல்ல மாறாக அடுத்த தலைமுறையினரை ஒழுக்கமாக கொண்டு வரும் துறை என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் அளவிற்கு ஈப்போ கருடா ஓட்டப பந்தைய சங்கம் செயலாற்றி வருகின்றனர்.

அந்த‌ வகையில் தாங்கள் கடந்து வந்த பாதை கொஞ்ங நஞ்சமில்லை‌. அதற்கு‌ மேலும் சவால்களை கடந்து இன்று தலை நிமிர்ந்து நிற்கிறோம் என‌ ஈப்போ கருடா ஓட்டப்‌‌ பந்தைய சங்கத்தின் தலைவர் வி.கிருஷணன் கூறினார்.

இளம்‌ ஓட்டப்‌‌ பந்தைய விளையாட்டாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈப்போ கருடா ஓட்டப் பந்தைய சங்கம் முழுமையாக களம் இறங்கியுள்ளது.
அந்த‌ வகையில் எங்களின் செயலவை அணியினர் சிறந்த ஒத்துழைப்பை‌ வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என ஈப்போ கருடா ஓட்டப் பந்தைய சங்கத்தின் 9 ஆம் ஆண்டுக் கூட்டத்தில்‌ அவர்‌ தெரிவித்தார்.

மேலும், தங்களுடைய சங்கத்திற்காக மித்ராவிடம் விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இந்த‌ கூட்டத்தில்‌ கடந்த‌‌ ஆண்டுக்களுக்கான ஆண்டறிக்கையும் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் கிந்தா சாஹாபாட் சமூக இயக்கத்தின் செயலாளர்‌ செல்வகணேசன் , புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் சார்பாக கவுன்சிலர்கள் லாரன்ஸ், சிவம் ஆகியோர் வருகை புரிந்தனர்.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் புதிய தலைவராக மீண்டும் கிருஷ்ணன் நிலைநிறுத்தப்பட்டார்.

கடந்த ஆண்டு தேசிய‌ அளவில்‌ நடைபெற்ற‌ சுக்மா , மக்சாக் அரசாங்க‌ அதிகாரிக்களுக்கான ஓட்டபந்தையம், தென்கிழக்காசிய‌ இளையோர்களுக்குன ஓட்டபந்தையத்தில் கருடா போட்டியாளர்கள் பல சாதனைஙளை‌ புரிந்துள்ளது நம் சங்கத்திற்கு பெருமை என‌ கிருஷணன்‌ மேலும் கூறினார்.

தொடர்ந்து‌, அடுத்து மார்ச் 15 ஆம் தேதி தமிழ்ப்பள்ளி மாணவரகளுக்கு குறுக்கோட்ட போட்டியை ஈப்போ கருடா சங்கம் மாணவர்களின் ஓட்டத் திறனை மேம்படுத்த நடத்தவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button