Malaysia

பேராசை பிடித்தவர்களால் மைபிபிபி கட்சி பல பிரச்சனைகளை எதிர்நோக்கியது டத்தோஸ்ரீ மெக்லின் டிகுருஸ் கட்சியை அபாயத்தில் இருந்து காப்பாற்றினார் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி உருக்கம்

சுபாங், பிப்.26-
பேராசை பிடித்தவர்களால் மைபிபிபி கட்சி பல பிரச்சனைகளை எதிர்நோக்கியதால் ஐந்து ஆண்டுகளாக செயல் இழந்ததாக மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி கூறினார்.

இந்நிலையில் மைபிபிபி கட்சியை அழிவில் இருந்து டத்தோஸ்ரீ மெக்லின் டிகுருஸ் காப்பாற்றினார். நெருக்கடியான காலகட்டத்தில் மைபிபிபி கட்சியை காப்பாற்றிய பெருமை டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் அவர்களையே சாரும் என்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது
சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவருமான டத்தோ மோகன் கந்தசாமி அவ்வாறு தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியை காப்பாற்றிய டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் இன்று நம்மோடு இல்லை என்றாலும் அவரின் சேவையை மறக்க முடியாது. சிலாங்கூர் மாநில மைபிபிபி தொகுதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றும்படி டத்தோ மோகன் கந்தசாமி கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு ஏராளமான உதவிகளை வழங்கி வருகிறது. இந்த உதவிகள் மைபிபிபி உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் தொகுதி தலைவர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்றார் டத்தோ மோகன்.

சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், மைபிபிபி இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button