
மைபிபிபி கட்சி மீண்டும் எழுச்சியோடு இயங்க வேண்டும் டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்து
சுபாங் பிப்.26-
மைபிபிபி கட்சி மீண்டும் எழுச்சியோடு இயங்க வேண்டும் என்று அதன் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வலியுறுத்தியுள்ளார்.
இதனை மைபிபிபி கட்சி உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். கட்சி மீண்டும் துடிப்புடன் செயல்பட உறுப்பினர்கள் அனைவரும் களமிறங்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.
மைபிபிபி கட்சியை வழிநடத்தப்போவது யார் என்ற போராட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் நீதிமன்ற படிகளை ஏறினோம்.
பலமுறை ஆர்ஓஎஸ் அலுவலகத்தை நோக்கி படை எடுத்தோம். இறுதியாக நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம்தான் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். மைபிபிபி உறுப்பினர்கள் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என்று சுபாங் தேசிய கோல்ஃப் மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோ லோகபாலா அவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ மெக்லின் டிக்குருஸ் கட்சியை காப்பாற்ற பாடுபட்டார். இன்று அவர் நம்மோடு இல்லை என்பது பெரும் வேதனையாகும். கடந்த 1992,1996 ஆம் ஆண்டுகளில் மைபிபிபி கட்சி இதேபோன்ற நீதிமன்ற வழக்குகளை எதிர் நோக்கியது.
அதில் இருந்து மீண்ட மைபிபிபி மிகவும் எழுச்சியோடு இயங்கியது.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றோம். இப்போது மைபிபிபி கட்சி நம் பக்கம் என்பதால் எந்தவொரு நெருக்கடியும் இல்லை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மைபிபிபி கட்சி மீண்டும் புதிய எழுச்சி பாதைக்கு திரும்ப வேண்டும். இதற்காக அனைத்து தொகுதி தலைவர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று டத்தோ லோகபாலா கேட்டுக் கொண்டார்.
இந்த நாட்டில் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக மைபிபிபி உருவாக அனைவரும் கடுமையான உழைக்க வேண்டும் என்று டத்தோ லோகபாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



