
மஸ்ஜிட் இந்தியா தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இருப்பது தெரிந்தும் நிலம் கைமாறியது எப்படி? தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி
கோலாலம்பூர், மார்ச் 23-
மஸ்ஜிட் இந்தியா 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இருப்பது தெரிந்தும் நிலம் கைமாறியது எப்படி?என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தெரிந்தும் எப்படி நிலத்தை வாங்க முடியும்? அல்லது, விற்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இது மிகவும் வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மஇகாவை குற்றம் சாட்டத் தொடங்கி விட்டதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த ஆலயம் சட்டவிரோதமானது அல்ல என்பதை டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுப்படுத்தினார்.
என்னை பொறுத்த வரையில் இந்த ஆலயம் 130 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளது. இதன் அடிப்படையில் தான் டத்தோஸ்ரீ சரவணன் உரிய விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம்தான் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மாநகர் மன்றம் இந்த நிலத்தை விற்றுள்ளது. ஜேக்கல் நிறுவனம் இந்தக நிலத்தை வாங்கியுள்ளது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இந்த ஆலயம் இங்குதான் உள்ளது. எந்த மாற்றமும் இல்லை. இது தெரியாமல் எப்படி நிலம் விற்கப்பட்டது?
இது வேடிக்கையாக இருக்கிறது. ஆலயம் இருப்பதை தெரிந்தவர்கள் இப்போது ஏன் கேள்வி எழுப்புகின்றனர் என்று தனக்கு தெரியவில்லை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்த ஆலயத்தை காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் ஆலயங்கள் உடைப்படுவதற்கு ம.இ.கா காரணமாக இருந்ததில்லை. மஇகா



