Malaysia

கோல்டன் எம்பயர் மீடியா மலேசியா நிறுவனம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ட்ரோன் & புகைப்பட பயிற்சி பட்டறை நடத்தியது 22 மாணவர்கள் பலனடைந்தனர்

ஜோகூர் பாரு, மார்ச் 25- கோல்டன் எம்பயர் மீடியா மலேசியா நிறுவனம் அதன் தலைவர் கலைமாமணி திரு. மகேந்திரன் நடராஜா தலைமையில் ஜோகூர் பாருவில் உள்ள கங்கர் பூலா தமிழ்ப்பள்ளியில் ட்ரோன் மற்றும் புகைப்பட பயிற்சி பட்டறையை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்துள்ளது.

இந்த ட்ரோன் மற்றும் புகைப்படம் பயிற்சி பட்டறையில் மொத்தம் 22 மாணவர்கள் நேரடிப் பயிற்சியில் பங்கேற்றனர், அங்கு அவர்கள் புகைப்படம் எடுத்தல், ட்ரோன் இயக்கம், வான்வழி வீடியோகிராபி, பிரேமிங் நுட்பங்கள் மற்றும் லைட்டிங் சரிசெய்தல் ஆகியவற்றின் அடிப்படை பயிற்சிகளை பெற்றனர்.

இந்தப் பட்டறை ஒரு அற்புதமான நேரடி அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியது, எதிர்காலத்தில் ஊடகத் துறையில் அவர்கள் ஈடுபட இது வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்த பயிற்சியில் அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி கொள்ள முடியும். இந்த ட்ரோன் மற்றும் புகைப்பட பயிற்சி மாணவர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கியது.

இந்த ட்ரோன் மற்றும் புகைப்பட பயிற்சியின் நிறைவு விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் மாயச்சந்திரன் சுப்பிரமணியம் மற்றும் பொறுப்பாசிரியர் கவிவேந்தன் புண்யநாதன் ஆகியோர் மாணவர்களின் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினர்,

இந்த ட்ரோன் மற்றும் புகைப்பட பயிற்சியின் அமர்வு முழுவதும் மாணவர்களின் உற்சாகத்தையும் சாதனைகளையும் அவர்கள் பாராட்டினர். இந்த இந்த ட்ரோன் மற்றும் புகைப்பட பயிற்சி நடத்த ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகம், பள்ளியின் தலைமையாசிரியர் மாயச்சந்திரன் சுப்பிரமணியம், பொறுப்பாசிரியர் கவிவேந்தன் புண்யநாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சியாளர் மகேந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button