Malaysia

மித்ராவை இப்போதுதான் ஆராய்வீர்களா? இந்தியர்களை ஏமாற்றாதீர் டத்தோ R.S.தனேந்திரன் காட்டம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மார்ச் 19-

மலேசிய இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் உதவும் என்ற நம்பிக்கையில் இந்திய ஏழை மக்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாகூறி விடாதீர்கள் என்று மெனாரா டத்தோ ஓனில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் இந்திய மக்களின் நலனுக்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் செடிக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் தற்போது மித்ரா என்று மாற்றி செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மித்ரா அதன் இலக்கை அடைந்துள்ளதா என்றால் இல்லை என்பதுதான் பதில். இப்போதுதான் மித்ரா குறித்து ஆய்வு நடந்தவிருப்பதாக ஒற்றுமை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தேவையில்லாத ஒன்று. மித்ரா வழி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விடுங்கள். உங்கள் ஆய்வை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் பல விஷயங்களை செய்துள்ளது. இந்நிலையில் செடிக் என்ற பெயர் மித்ரா என்று மாற்றப்பட்டு அது செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆய்வு செய்யவிருப்பதாக கூறியிருப்பது முட்டாள்தனமாக உள்ளது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் சொன்னார்.

கடந்த காலங்களில் மித்ரா தமிழ் பாலர் பள்ளிகளுக்கு நிதி வழங்கி வந்தார்கள். தற்போது அதனை காரணமில்லாமல் நிறுத்தி விட்டார்கள். தற்போது பாலர் பள்ளிகள் நடத்துநர்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து மித்ரா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.

பிரதமர் துறையில் இருந்த மித்ராவை மீண்டும் ஏன் ஒற்றுமை துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும்? பிரதமர் துறையில் இருந்தால் மட்டுமே மித்ராவை நல்ல முறையில் வழிநடத்த முடியும் என்பதால் மித்ராவை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தை முழுமையாக ஆதரிப்பதாக டத்தோஸ்ரீ R.S.தனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button