Malaysia

“அனைத்து தெலுங்கு மக்களும் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட வேண்டும்” தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெலுங்கு உகாதி புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், மார்ச் 29-
மலேசியாவில் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் அனைவருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் 2025 தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளை அதன் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டிற்கு இப்பொழுது பண்டிகை காலம் மலர்ந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு சமய விழாக்கள் இடம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் தங்களின் உகாதி புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த இந்த இனிமையான இன்ப தருணத்தில் மஇகாவும் பங்கெடுத்துக் கொள்ளும் அதேவேளை, மலேசியாவில் வாழுகின்ற அனைத்து தெலுங்கு மக்களும் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட மஇகா சார்பிலும் தன் குடும்பத்தின் சார்பிலும் ‘உகாதி சுபகாஞ்சலு’-இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளை மலேசிய நாடாளுமன்ற மேலவையின் மேனாள் தலைவருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button