
ஈஜோக் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தை அமாவசை பூஜை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது
ஈஜோக், மார்ச் 30- ஈஜோக்-ஜெராம் இடையில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தை அமாவசை பூஜை மார்ச் 30 புதன்கிழமை இரவு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த தை அமாவசை பூஜை அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன.
அம்மன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தீபாரதனைகள் காட்டப்பட்டன.
அதன் பிறகு அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லாக்கில் ஏற்றப்பட்டு ஆலய உள்வீதி உலா வந்தார். இந்த தை அமாவசை பூஜையில் கிட்டதட்ட ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர்.
ஆலயத்தில் தை அமாவசை பூஜை தொடங்கிய போது தாரை, தப்பட்டை உருமிமேளம் மற்றும் நாதஸ்வர இசை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த தை அமாவசை பூஜையின் போது புரோகிதர் பாடிய அம்மன் பாடல் கங உரோமங்களை சிலிர்க்க வைத்தது. ஒரு சில பக்தர்கள் அருள் இறங்கி சாமி ஆடியது அம்மனின் சக்தியை எடுத்துக் காட்டியது.
இந்த தை அமாவசை பூஜையில் சுமார் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் புற்றுப்பகுதியில் இருந்த அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் பல்லாக்கு வீதி உலா முடிவடைந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூஜை இனிதே் முடிவடைந்தது. அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



