
Johor Bahru Sutera Mall colors of India நிறுவனத்தின் தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக விற்பனை சந்தை பிக்பாஸ் வெற்றியாளர் முத்துகுமார் சிறப்பு வருகை
ஜொகூர் பாரு,மார்ச் 30-
இந்திய வணிகர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க colors of India நிறுவனம் Johor Bahru Sutera Mall பேரங்காடியில் நடைபெற்று வரும் விற்பனை சந்தை நிகழ்வில் பிக்பாஸ் வெற்றியாளர் முத்துகுமார் சிறப்பு வருகை தந்து அவரது ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த colors of Indiaவின் விற்பனை சந்தை நிகழ்வுக்கு
பிக்பாஸ் வெற்றியாளர் முத்துகுமார் சிறப்பு வருகை தந்து இந்திய வணிகர்களை ஊக்குவித்தார். இந்த விற்பனை சந்தை ஜொகூர் பாரு Sutera Mall பேரங்காடியில் மார்ச் 26 சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் நடைபெற்று வருகிறது.
இந்த தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி தம்மை பிரமிக்க வைத்ததாகவும் முதல் முறையாக மலேசியாவிற்கு ஒரு விற்பனை சந்தை நிகழ்வுக்கு வருகை தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முத்துகுமார் தெரிவித்தார்.
இந்த விற்பனை சந்தையில் போடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் தொழில் பொருட்களை சந்தைபடுத்தியுள்ள நிலையில் பலரை நேரில் சந்நித்து பேசியது மகிழ்ச்சியளித்துள்ளது.
இந்த விற்பனை சந்தை மார்ச் 26 தொடங்கிய வேளையில் மாபெரும் திறப்பு விழா கடந்த மார்ச் 27 வெள்ளிக்கிழமை இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்திய பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. புடவைகள், அலங்கார பொருட்கள், வளையல்கள், உணவு பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் விற்பனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்ததாக முத்துக்குமார் சொன்னார்.
இந்த விற்பனை சந்தை ஒரு வியாபார தளமாக மட்டும் இல்லாமல் ஒரு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இசைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த Sutera Mall விற்பனை சந்தைக்கு மக்களிடமிருந்த நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக முத்துக்குமார் கூறினார்.
இந்த colors of India நிறுவனத்தின் தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி விற்பனை சந்தை ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீடிக்கவிருப்பதால் மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி பிக்பாஸ் முத்துக்குமார் அழைப்பு விடுத்துளளார்.



