Malaysia

விலாயா மாநில கெஅடிலான் தேர்தல் அமைச்சர், இரண்டு எம்.பி.க்கள் அதிர்ச்சி தோல்வி

கோலாலம்பூர் ஏப்.20-
விலாயா மாநில கெஅடிலான் தொகுதி தேர்தலில் அமைச்சர் நிக் நஸ்மி உட்பட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தனர்.

சுற்றுச் சூழல் இயற்கை வள அமைச்சர் மற்றும் செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நேற்று செத்தியா வங்சா தொகுதி தலைவர் தேர்தலில் இயக்குனர் – நடிகருமான அப்லிடின் என்பவரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

வங்சா மாஜூ தொகுதி தேர்தலில் வங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் ஹாகிர் ஹசான் நடப்பு தலைவர் சாய் சென் ஹெங்கிடம் தோல்வி அடைந்தார்.

பத்து கெஅடிலான் தொகுதி தேர்தலில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 153 வாக்குகள் வித்தியாசத்தில் அஸிக் அணியிடம் தோல்வி அடைந்தார்.

அதேசமயம் புக்கிட் பிந்தாங் தொகுதி தேர்தலில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அன்வார் என்பவரிடம் தோல்வி அடைந்தார்.

இம்முறை கெஅடிலான் தொகுதி தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button