
அமெரிக்காவின் இறக்குமதி வரி அதிகரிப்பு மலேசியா வளர்ச்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் கருத்து
கோலாலம்பூர்,ஏப்.19-
அமெரிக்காவின் 24% வரி மலேசியாவின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக உருவாகியுள்ள போதிலும் மலேசியா வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு வர்த்தகரான
டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஏற்றுமதி சார்ந்த மலேசியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இருந்தாலும் அதனை மலேசியா புதிய அணுகுமுறையோடு எதிர்கொள்ள வேண்டும். அமெரிக்கா, மலேசியாவுக்கு இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக இருந்து வருவதால் அதனை மலேசியா ஆற்றலுடன் கையாள வேண்டும் என்று டத்தோ சங்கர் ராஜ் கூறினார்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 13.2% ஏற்றுமதியை உருவாக்கியது. ஆனால், இந்த புதிய வரி நடவடிக்கைகள், குறிப்பாக Elektrik & Elektronik (E&E), உலோகப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் குடிமனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாற்று வழியை கையாள வேண்டும்.
இந்த நடவடிக்கையின் விளைவுகள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. MITI மூலம் தகுந்த நடவடிக்கைகள் திட்டமிடப்படவுள்ளன. மலேசியா அனைத்து நாடுகளுடன் நேர்மையான மற்றும் நல்ல தொடர்புகளை பராமரிக்க உறுதிபடுத்தும்.
இந்த வரி விலக்கில் சிறு குத்தகையாளர்கள் விலக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உபரி பாகங்கள், தயாரிப்பு பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் போன்றவைகளுக்கு பெரும் அழுத்தம் ஏற்படலாம். மேலும் பினாங்கு, சிலாங்கூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தொழில்துறை மையங்கள் குறைந்த பெருமானம் மற்றும் உற்பத்தி சரிவுகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் கூறினார்.
இதுபோன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார விளைவுகள் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 0.5% முதல் 1% வரை குறைக்கும். மேலும், ரப்பர், மருத்துவ கையுறை போன்ற பொருட்கள் தொடர்பான உறபத்தியை இந்த வரி விதிப்பு பாதிக்கும் என்ற நிலையில் மாற்று நடவடிக்கைகள் அவசியம் என்றார் டத்தோ சங்கர் ராஜ்.



