
மழையா கணபதி வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 4ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு MAB HALL,BRICkFIELDS மண்டபத்தில் நடைபெறும்
கோலாலம்பூர் ஏப். 22-
“மலாயா கணபதி” இது வெறும் பெயர் அல்ல. மலேசிய வரலாற்றில் மறக்கவும் மறுக்கவும் முடியாத வரலாற்று நாயகனின் பெரும் அடையாளம்.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையை நிலைநிறுத்திய முகவரி,அன்றைய மலாயா மண்ணின் விடுதலைக்காக உரக்க முழங்கிய மாவீரன்.
தமிழினத்தின் அடையாளமாகவும் பெருமையாகவும் போற்றப்பட வேண்டிய தொழிற்சங்கவாதி.
இத்தகையப் பெருமைக்குரிய அவரை நம்மில் எத்தனைப் பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?நம் வரலாற்றைப் பேசுவதும்,அறிந்து வைத்திருப்பதும் நம் கடமைதானே?
நமது அடுத்த தலைமுறைக்கு அதனை அறிய வைப்பதும்,அவர்களிடையே கொண்டுச் சேர்க்க வேண்டியதும் நம் கடமைதானே?
இன்றைய இம்மண்ணில் தொழிலாளர் உரிமைகள் நிலைத்திருக்கவும் தொடர்ந்து முன்னெடுக்கவும் விதைகளாய் ஆனவர்களை நாம் போற்றி மதிக்கத்தானே வேண்டும்.
அவ்வகையில்,தமிழர் எண்ணங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் எண்ணத்திலும் நீங்காத மனிதர்களாக மலாயா கணபதியும் அவரோடு களத்தில் நின்ற பி.வீரசேனன்,சாம்பசிவம் என எண்ணிலடங்கா தொழிற்சங்வாதிகளை நினைவுக்கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அவர்களை நினைவுக்கூறவும் அடுத்த தலைமுறைக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கும் இந்த வரலாற்றைக் கொண்டுச் சேர்க்கவும் 4.05.2025 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.30 மணிக்கு மலேசிய பார்வையற்றோர் சங்க மண்டபம், பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் (MAB HALL,BRICkFIELDS) எனும் இடத்தில்
நடைபெறும் நூல் அறிமுகத்திற்கு தங்களின் வருகை நனிச் சிறப்பானதாகும்.
இவ்வேளையில்,இந்நூல் அறிமுகத்திற்கு தங்களை அழைப்பதில் அகம் மகிழ்கிறோம்.
தொடர்புக்கு
016-5684302-சிவாலெனின்
016-543 2572 – யோகி



