Malaysia

colors of India நிறுவனத்தின் தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி Johor Bahru Sutera Mall பேரங்காடியில் கோலாகலமாக தொடங்கியது

ஜொகூர் பாரு,மார்ச் 28-
இந்திய வணிகர்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் colors of India நிறுவனம் நாடு தழுவிய நிலையில் விற்பனை சந்தையை நடத்தி முக்கியப் பங்காற்றி வருகிறது.

அந்த வகையில் ஜொகூர் பாரு Sutera Mall பேரங்காடியில் மார்ச் 26 சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் colors of India நிறுவனத்தின் தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி எனும் மாபெரும் இந்திய விற்பனை சந்தை நடைபெற்று வருவதாக colors of India நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன செல்வி ரவிந்தர் கூறினார்.

இந்த தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
இந்த விற்பனை சந்தையில் 200க்கும் மேற்பட்ட சிறுதொழில் வியாபாரிகள் தங்கள் தொழில் பொருட்களை சந்தைபடுத்தியுள்ளனர். இந்த விற்பனை சந்தையின் மாபெரும் திறப்பு விழா மார்ச் 27 வெள்ளிக்கிழமை இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்திய பாரம்பரிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. புடவைகள், அலங்கார பொருட்கள், வளையல்கள், உணவு பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் விற்பனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளதாக மோகன செல்வி தெரிவித்தார்.

இந்த விற்பனை சந்தை நிகழ்வுக்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் YB யுவனேஸ்வரன்்மற்றம் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம் இருவரும் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.

இந்த விற்பனை சந்தை ஒரு வியாபார தளமாக மட்டும் இல்லாமல் ஒரு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இசைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த Sutera Mall விற்பனை சந்தைக்கு மக்களிடமிருந்த நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக மோகன செல்வி கூறினார்.

இந்த colors of India நிறுவனத்தின் விற்பனை சந்தைக்கு நாடு தழுவிய நிலையில் இருந்து மக்கள் வருகிறார்கள். இதில் குறிப்பாக ஜொகூர் மக்கள், சிங்கப்பூர் மக்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த விற்பனை சந்தையில் ஒவ்வொரு நாளும் ஒரு சர்ப்பரைஸ் நடக்கும். அந்த வகையில் மக்களை மகிழ்ச்சிபடுத்த இந்திய கலைஞர்கள், மலேசிய கலைஞர்கள் வருகை தரவிப்பதாக மோகன செல்வி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விற்பனை சந்தை நிகழ்வில் இசை நிகழ்ச்சி, ஆடல், பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. மேலும் சிறுவர்களுக்கான போட்டிகள், திறமைகளை வெளிப்படுத்தும் அங்கம் உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளன. Miss and Mrs colors of India அழகு ராணி போட்டி, பாடும் திறன் போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருவதாக மோகன செல்வி குறிப்பிட்டுள்ளார்.

இந்த colors of India நிறுவனத்தின் விற்பனை சந்தை நிகழ்வுக்கு வருகை மேற்கொண்ட சிகாமாட் நாடாளுமன்ற யுவனேஸ்வரன் ஆண்டுதோறும் இடைவிடாமல் நடைபெற்று வரும் colors of India நிறுவனத்தின் விற்பனை சந்தையை பாராட்டினார்.

இந்த விற்பனை சந்தை நிகழ்வுக்கு மக்கள் திரளாக வர வேண்டும். இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு இந்த விற்பனை சந்தை தலம் ஒரு சிறந்த தலம் என்பதால் மக்கள் ஆதரவு முக்கியம். இதில் 65 விழுக்காடு பெண்களாக இருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். கலை, கலாச்சாரம் என்ற நிலையை தாண்டி நமது சமுதாயம் பொருளாதார பலத்தை ஏற்படுத்திக் கொள்ள colors of India நிறுவனத்தின் விற்பனை சந்தை சிறந்த தலம் என்று பாராட்டியுள்ளார்.

இந்த colors of India நிறுவனத்தின் தெற்காசிய போலிவுட் மற்றும் இந்திய வர்த்தக கண்காட்சி மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதால் மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி colors of India நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button