
கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் போட்டி!
கோலகுபு பாரு, மார்ச் 28-
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
கெஅடிலான் கட்சியின் நான்கு துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றிற்கு தனது வேட்புமனுவை அறிவித்த எட்டாவது வேட்பாளராக டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் விளங்குகிறார்.
இந்த தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. கட்சியின் தேர்தல்களில் நான்கு துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றிற்கு போட்டியிடப் போவதாக Dr சத்தியபிரகாஷ் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கட்சித் தலைவர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இப்போட்டியில் களமுறங்க முடிவு செய்ததாக டாக்டர் சத்யா பிரகாஷ் சத்தியா தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றபோது உலு சிலாங்கூர் பிகேஆர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட ஆதரவாளர்களுடனும் இது பற்றி விவாதித்ததாகவும் Dr சத்தியபிரகாஷ் கூறினார்.
தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யவும், கட்சியின் 2025 தேசிய மாநாட்டின் இயக்குநர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாகவும் Dr சத்தியபிரகாஷ் சொன்னார்.
“கட்சியின் உயர் தலைமை பொறுப்பை ஏற்கவும், மாநாட்டை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யவும் பொருத்தமான ஒருவரை நியமிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அறிக்கை ஒன்றில் Dr சத்தியபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு துணைத் தலைவர்களான சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ பெசார் அமிரூடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத், அறிவியல், தொழில்நுட்பம் துறை அமைச்சர் சாங் லிஹ் காங் ஆகியோர் இந்த உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
மேலும் முன்னாள் பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார், தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் சுங்கை பூலோ பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் ஆகியோரும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் அடங்குவர்.
தற்போது டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் அவர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் உதவித் தலைவர் தேர்தல் களம் சூடு பிடித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



