Malaysia

46 வது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி அறிமுகமாக 35 வயதிற்கு மேற்பட்ட மகளிர் இரட்டையர் பிரிவு.

ஈப்போ, ஏப்.23:
பேராக் மாநிலத்தின் இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 46 வது ஆண்டாக தேசிய பூப்பந்து விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி ஈப்போ பூப்பந்து அரங்கம் கம்போங் சீமியில் எதிர்வரும் மே மாதம் 30,31 மற்றும் ஜுன் 1 ல் நடைபெறவுள்ளதாக இச்சங்கத்தின் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான லோகநாதன் நாகப்பன் கூறினார்.

இவ்வாண்டில் 24 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள். அவற்றில் 35 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் மகளிர் பிரிவு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த பிரிவு அறிமுகம் செய்யப்படுவதால் நாடு முழுவதுமுள்ள அதிகமான இந்திய மகளிர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, இவ்வாண்டில் 10 வயது முதல் 70 வயதிற்கும் மேற்பட்டோர் இப்பூப்பந்து போட்டியில் கலந்துக் கொள்வார்கள்.

கடந்தாண்டில் 750 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இம்முறை அதற்கும் அதிகமான விளையாட்டாளர்கள் பங்கேற்பாளர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த பூப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, நாடு முழுவதுமுள்ள இந்திய பூப்பந்து விளையாட்டாளர்கள் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர். தொடர்புக்கு 019-5592305.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button