
உயர்மட்ட தலைவர்கள் தேர்தல் வேட்புமனு தாக்கல் மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும்
கோலாலம்பூர், மே 3-
கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுக்கான வேட்புமனு தாக்கல் மே 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் உண்மையில் மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்த வேட்புமனு தாக்கல் உண்மையில் மே 3, 4ஆம் தேதிகளில் நடைபெறவிருந்தது. ஆனால் இந்த வேட்புமனு தாக்கலை ஒத்திவைக்க மத்திய தேர்தல் குழு முடிவு செய்துள்ளதாக கெஅடிலான் கட்சி ஓர் அறிக்கையில் கூறியிருந்தது. எனினும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இந்த ஒத்திவைப்புக்கான காரணத்தை கட்சி தெரிவிக்கவில்லை.
இந்த உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் மே 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி மே 9 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடைபெறும். இந்த வேட்புமனு தாக்கல்
தொடர்பான முழு செயல்முறை நடவடிக்கையும் இணையம் வழி (online) ஆன்லைனில் நடைபெறும் என்று தேர்தல் குழு தலைவர் டாக்டர் ஜலேஹா முஸ்தபா கூறினார்.



