
பத்துமலைக்கு 10 லட்சம் வெள்ளி பெற்றுத்தந்த ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி
பத்துமலைக்கு
10 லட்சம் வெள்ளி பெற்றுத்தந்த ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நன்றி
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,பிப்.13-
ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பெரும் முயற்சியில் பத்துமலை திருத்தல மேம்பாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 லட்சம் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளதை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
பத்துமலை திருத்தல மேம்பாட்டிற்கு 10 லட்சம் வெள்ளி வழங்கிய பிரதமர் அன்வாருக்கு நன்றி. மேலும் பத்துமலை மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது நன்றியை புலப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இந்துக்கள் தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடினர். நாடு தழுவிய நிலையில் முருகன் திருத்தலங்களில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. இதில் பத்துமலை திருத்தலம் விழாக்கோலம் பூண்டது. இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாய் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடியது பாராட்டத்தக்கது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இந்நிலையில் பத்துமலை மேம்பாட்டிற்கு பிரதமர் 10 லட்சம் வெள்ளி வழங்கியுள்ளார். இதற்கு பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி. பத்துமலைக்கு அரசாங்கத்தின் உதவி தேவை என்பதை தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பிரதமரின் பார்வைக்கு கொண்டு சென்றதன் விளைவாகவே அது 10 லட்சம் வெள்ளியை தேடித்தந்துள்ளது.
பத்துமலை திருத்தல விவகாரம் தொடர்பில் அண்மையில் ஒற்றுமை அரசாங்கத்தின் செயலக கூட்டத்தின் போது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரிக்கை மனுவை வழங்கி விளக்கமளித்துள்ளார். பத்துமலைக்கு அரசாங்கம் உதவ வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமரிடம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கியுள்ளார். இதன் விளைவாகவே 10 லட்சம் வெள்ளி நன்கொடை நிதிக்கான விளைவு என்பது அனைவரும் அறிந்த உண்மை.
பத்துமலைக்கு அரசாங்கம் வழங்கிய 1 மில்லியன் நிதியுதவி அதாவது 10 லட்சம் வெள்ளி நன்கொடைக்கு வழங்க தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை பத்துமலைக்கு மேற்கொண்ட வரலாற்றுப்பூர்வ வருகைக்கு தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முக்கிய காரணம் என்பது ஊர் அறிந்த உண்மை. பத்துமலை திருத்தலத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்தியர் கலாச்சார மையத்தை திறந்து வைத்து பத்துமலையின் நிலவரம் குறித்து அறிந்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
பிரதமரின் இந்த வரலாற்றுப்பூர்வ வருகை பத்துமலைக்கு 10 லட்சம் வெள்ளியை தேடித்தந்துள்ளது. ம.இ.கா மட்டுமே எல்லா காலங்களிலும் இந்திய சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிக்கும் ஆலயங்களுக்கும் துணை நிற்கிறது என்பதை தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நிரூபித்துள்ளார்.

பத்துமலை மேம்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கிய 10 லட்சம் வெள்ளியோடு நிற்காமல் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கும் பிரதமர் அன்வார் செவிசாய்த்து அரசாங்கம் தொடர்ந்து பத்துமலைக்கு உதவும் என்றும் தேவஸ்தானத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பத்துமலை திருத்தலம் தற்போது உலக தரத்திற்கு உயர்த்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்தமலை மேம்பாட்டுக்கு தொடக்க நிதியாக 10 லட்சம் வெள்ளியை அறிவித்துள்ளார். இந்த நிதி பத்துமலையில் கட்டப்படும் பல்நோக்கு மண்டபம், மின் படிக்கட்டு உள்ளிட்ட திட்டங்களுக்கு உதவும் என்றும் இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், தைப்பூசம் சிறப்பாக நடைபெற உதவிய தேவஸ்தானம், ஒற்றுமையாய் தைப்பூசம் கொண்டாடி ஒற்றுமையை புலப்படுத்திய இந்து பெருக்கள், காவல்துறை, மருத்துவக்குழு அம்புலன்ஸ், ரேலா, தெனாகா நேஷனல் உள்ளிட்ட அனைவருக்கும் ம.இ.கா சார்பில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.



