Malaysia

லெபோ அம்பாங் குப்பணா உணவகத்தில் சுவையான தமிழ் பாரம்பரிய உணவு வகைகள்

கோலாலம்பூர், மே 2-
நாட்டில் புகழ்பெற்ற லெபோ அம்பாங்கில் உள்ள குப்பணா உணவகத்தில் சுவையான இந்திய மற்றும் தமிழ் பாரம்பரிய உணவு வகைகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

ஒரே வாலை இழையில் நான்கு பேர் அமர்ந்து சாப்பிடும் கெடா கறி விருந்து இங்கு பிரமாதம். அதேசமயம் 15 விதமான மரக் கறிகளுடன் வாழை இலை சைவ உணவும் இங்கு பரிமாறப்படுகிறது.

பருப்பு பொடி மற்றும் மாங்காய் பச்சடி சுவையோ சுவை.
அமைதியான சூழலில் வாடிக்கையாளர் அனைத்து விதமான உணவு வகைகளை ரூசித்து சாப்பிடும் வகையில் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான கார் பார்க்கிங்யும் உள்ளது என்று குப்பணா உணவகத்தின் நிர்வாகி விஷ்வா தெரிவித்தார்.

குப்பணா உணவகத்திற்கு வருகை தரும் மலேசிய தமிழர்களின் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதேசமயம் இவர்களும் தங்களுக்கு பிடித்தமான பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று விஷ்வா தெரிவித்தார்.

இதனிடையே மே மாதம் சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மலேசிய தொழிலாளர்கள் அனைவரும் ( இந்திய பிரஜைகள் உட்பட) மே மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை குப்பணா உணவகத்தில் 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button