
ஆலய விவகாரங்கள் சரியாக கையாளப்பட வேண்டும் அதனை முறையாக இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் மத விவகாரங்கள் சர்ச்சையாக்கப்படக்கூடாது நூருல் இஸா அன்வார் வலியுறுத்து
தேசம் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் மே 18-
ஆலயங்கள் உடைபடும் அல்லது இடம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் ஓரு சமூகமான தீர்வு நடைமுறை பின்பற்ற வேண்டும் என்று நூருல் இஸா அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
ஆலயமாக இருந்தாலும் அல்லது மஸ்ஜிட்டாக இருந்தாலும் ஒரு சரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆலயங்கள் உடைபடும் பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால் அதற்கு சுமூகமான வகையில் தீர்வு காண முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நூருல் இசா தெரிவித்தார்.
நாட்டில் ஆலயங்களை குறி வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை அரசியல் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நூருல் இசாவிடம் தேசம் குணாளன் மணியம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
இந்த ஆலய விவகாரம் குறித்து சலனமின்றி பதிலளித்தார் நூருல் இசா. ஆலயம் அல்லது மஸ்ஜிட் விவகாரம் முறையாக கையாளப்பட வேண்டும். இதில் குறிப்பாக ஆலயம் போன்ற வழிபாட்டுத்தலங்கள் சட்டத்திற்கு உட்பட்டு கவனிக்கப்பட வேண்டும். ஆலய விவகாரங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகள் வாயிலாக தீர்வு காண்பதே சிறந்தது என்று நூருல் இசா சொன்னார்.
நாட்டில் மத விவகாரங்கள் சர்ச்சையாக்கப்படக்கஏடாது. இது உணர்ச்சிப்பூர்வமான விவகாரம். இது முறையாக கையாளப்பட வேண்டும். இதைதான் நானும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிபோது தேசம் ஊடகம் எழுப்பிய கேள்விக்கு நூருல் இசா அவ்வாறு பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



