Malaysia

கெஅடிலான் கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது டத்தோஶ்ரீ அன்வார் என்ற ஆளுமையுடன் தொடர்ந்து பயணிப்போம் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் வேண்டுகோள்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மே 21-

கெஅடிலான் கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடப்பதால் டத்தோஶ்ரீ அன்வாருடன் தொடர்ந்து முன்னேறி செல்வோம் என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு தழுவிய நிலையில் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தல் புதிய தலைமையைத்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேளையில் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே நீதி, சீர்திருத்தக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ஒரு ஜனநாயக கட்சியாக கெஅடிலான் கட்சி திகழ்வதாக கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கி போட்டியிடும் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் இந்தத் தேர்தல் கட்சி உறுப்பினர்களின் அடிமட்ட வலிமையை எடுத்துரைக்கிறது. இங்கு ஒற்றுமையை காண முடிகிறது.

இது எங்கள் கட்சி எங்கள் குடும்பம். பல இன, பல மதக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு கட்சியாக பல்வேறு சவால்களை கடந்து கெஅடிலான் கட்சி சாதனை படைத்துள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் சொன்னார்.

எங்களுக்கு கட்சித் தேர்தல் புதிதல்ல. நாங்கள் மாறுபட்ட கருத்துக்களை வரவேற்கும் ஒரு சீர்திருத்தக் கட்சி.

ஆகையால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் மடானி மலேசியாவை உருவாக்கி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒன்று என்றார் டத்தோஸ்ரீ ரமணன்

கெடிலான் கட்சியின் இந்தத் தேர்தலை கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வேட்பாளர்களும் மாநில, பொதுத் தேர்தல்களுக்குத் தயாராக வேண்டும். கட்சியை வலுப்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.

கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி நடக்கும் இந்த கட்சியை மேலும் அடித்தளம் அமைத்து வலுப்படுத்த முனைப்பு காட்டுவதை உறுதி செய்ய வேண்டும்.

கட்சியின் இந்தத் தேர்தல் பதவிகளக்கானது மட்டுமல்ல. இது கெஅடிலான் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகை உள்ளடக்கியிருக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் குரல் கட்சியின் போராட்டமாக இருக்கிறது. கட்சியின் போராட்டம் மக்களுக்கு சாதகமாக இதயத்துடிப்பாக இருப்பதால் அடிமட்ட மக்கள் வழங்கும் ஆதரவுதான் அவர்களின் குரலாகவும் கட்சிக்கு பலமாகவும் அமைகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

தேசிய அரசியல் நிரோட்டத்தில் கெஅடிலான் கட்சி ஒரு முக்கிய சக்தியாக வலுப்படுத்த ஒற்றுமையும் சீர்திருத்தக் கொள்கைகளும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து உதவும்.

மேலும் பிரதமரும் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுடன் இணைந்து நாம் ஒரே அணியாக முன்னேறிச் செல்வோம் என்று டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

கெஅடிலான் ஒரு அணிதான் இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் நமது வேறுபாடுகள் நமது பலம், நமது உள் ஜனநாயகம் கட்சியின் அரசியல் அனுபவத்திற்கு ஒரு முக்கிய சான்றாகும் என்பதால் அனைவரும் முன்னே முன்னேறிச் செல்வோம் என்று கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் டத்தோஶ்ரீ ஆர்.ரமணன் ஒர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button