Malaysia

தேசிய தரவு பாதுகாப்புச் சட்டம் மக்களுக்கானது  நிர்வகிக்க தேசிய தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டுள்ளது கோபிந்த் சிங் டியோ தகவல்

கோலாலம்பூர், ஜூன் 3- இலக்கவியல் அமைச்சு, இலக்கவியல் தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

2025 ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் [சட்டம் 864] கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததை அடுத்து இந்தக் கொள்கை வெளியிடப்படுகிறது.

தனி மனித தரவு என்பது இரகசியமாகவும், முறையாகவும் பாதுகாக்கப்பட வேண்டியது. இதனை கருத்தில் கொண்டு, மக்களின் தரவுகளை நிர்வகிக்க தேசிய தரவுப் பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டது.

தனது தலைமையில் இயங்கும் இந்தக் குழுவில், நாட்டிலுள்ள முக்கிய அமைச்சுகளிலிருக்கும் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆக அந்தந்த அமைச்சுகளின் தரவுகள் முறையாகவும், துல்லியமாகவும் இலகுவாகவும் கையாள இந்த தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு வழிகாட்டும்.

அதன் வழி தரவுப் பகிர்வுக்கான கொள்கையை விரைவில் வெளியிடப்படும் என கோபிந் சிங் டியோ கூறினார்.

தேசிய தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பகிரப்படும் தரவு செயல்பாடுகள் அந்ததந்த அமைச்சுக்கேற்ப இலகுவாகவும், பாதுகாப்பானாதாகவும், சட்டத்திட்குட்பட்டதாகவும், முறையானதாகவும் இருப்பதை உறுதிச் செய்ய தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு அமைக்கப்பட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் ஃபேபியன் பிகார், மற்றும் தேசிய தரவுப் பகிர்வு ஆணையத்தின் தலைவர் Ts. நிக் சல்பிஹா பிந்தி நிக் மாட், ஐசிடி தலைமை ஆலோசகர், மற்றும் தேசிய இலக்கவியல் துறையின் தலைமை இயக்குநர், மற்றும் தேசிய தரவுப் பகிர்வு ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் முன்னிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தரவுப் பகிர்வு ஆணையக் கூட்டத்தின் தொடக்க உரையில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இவ்வாறு கூறினார்.

தரவுப் பகிர்வு சட்டம், அரசின் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே தரவுப் பகிர்வுக்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. அதோடு, அரசுத் துறைகள் நிகழ்நேரத் தரவையும் பெற இயலும்.

கட்டுப்படுத்தப்பட்ட தரவுக் கொள்கையின் வழி, தரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதோடு, தனிநபர்களின் தனியுரிமையில் தலையிடாது, அதேவேளையில் அந்தந்த தேவைக்கேற்ப செயல்முறைகளை விரைவுபடுத்துவதோடு, பொதுச் சேவைத் துறையை மிகவும் பயனுள்ள வகையில் இது ஒருங்கிணைக்க உதவும். தேசிய அளவில் மட்டுமல்லாது, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இது நீட்டிக்கப்படும் என கோபிந்த் கூறினார்.

அதிகாரப்பூர்வ தரவுகளை இலக்கவியல்மயமாக்குவதன் வழி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவுப் பகிர்வு மற்றும் பகுப்பாய்வுகளை சுலபமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளலாம். இதன்வழி அரசாங்கச் சேவை தரத்தை மேம்படுத்தலாம்

இலக்கவியல் அமைச்சு, நாடு முழுவதும் தரவு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5G ஐப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, Digital Twin Initiative எனப்படும் செயற்கை நுண்ணறிவு முயற்சிக்கு தமதமைச்சு முன்னுரிமை அளிக்கும். இது, நகரத்தின் மெய்நிகர் மாதிரியாகும்.

2025 ஆம் ஆண்டு தரவுப் பகிர்வு சட்டம் நடைமுறைக்கு வருவது, அரசு நிறுவனங்களுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். இது நாட்டு மக்களுக்கு பயனளிக்கும், அவர்களின் நலனைப் பாதுகாக்கும், மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அரசு நிறுவனங்கள் இடையே தரவுப் பகிர்வு, தரவு சேகரிப்பில் ஏற்படும் செலவினங்களைக் குறைத்து, பொதுச் சேவை விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரித்து, அரசு நிறுவனங்கள் மீது மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. பகிரப்பட்ட தரவு, உண்மையான மற்றும் புதுப்பித்த தகவல்களின் அடிப்படையில் கொள்கைகளைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் உதவுகிறது.

ஆக நமது நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் கோலோச்ச இலக்கவியல் அமைச்சு பாடுபடுகிறது. அதற்குச் சான்றாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய தரவுப் பகிர்வு பாதிகாப்புச் சட்டமும், அதனை முறையாக வழிநடத்த தேசிய தரவு பகிர்வு ஆணைய குழு விளங்கும் என அமைச்சர் கோபிந் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button