
பாஜக அருவருப்பு அரசியல்
சென்னை,ஏப்.21-
அமலாக்கத்துறையை ஏவி விட்டு, பாஜக அருவருப்பு அரசியல் செய்வதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு காட்டம். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலைப் பெற வேண்டுமென அறிவுறுத்தல்.
விசிகவை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை பலவீனப்படுத்த சதி. திமுகவை மட்டுமே நம்பி, விசிக இருப்பது போன்று சித்தரிக்கப்படுவதாகவும் திருமாவளவன் குற்றச்சாட்டு.
உச்சநீதிமன்றத்தை தொடர்ந்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மீதும், நிஷிகாந்த் துபே விமர்சனம். பாஜக எம்.பி. மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரலுக்கு, மூத்த வழக்கறிஞர் ரன்வீர் கடிதம்.
சமூக வலைதளங்களில் நாகரிகமாகவும், கட்டுப்பாட்டுடனும் கருத்து தெரிவிக்க வேண்டும். பாஜக நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்.
ஐ.பி.எல். தொடரில் சென்னையை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி, தேவ்தத் படிக்கலின் அதிரடியால் பெங்களூரு வெற்றி



