Malaysia

புரட்சி இயக்கத்தின் முதலாளி திட்டத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கலந்து கொள்ளுங்கள் வீ.கணபதிராவ் கோரிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மார்ச் 12-
இந்தியர்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக புரட்சி இயக்கம் நடத்தவிருக்கும் முதலாளி திட்டத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் பங்கேற்க கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த முதலாளி திட்ட நிகழ்வில் கட்சி பேதங்களை களைந்து அனைவரும் கைகோர்க வேண்டும். புரட்சி இயக்கத்தின் முதலாளி நிகழ்வு வரும் மார்ச் 30ஆம் தேதி காலை 10 தொடங்கி இரவு 10 மணி வரை கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கணபதிராவ் கூறினார்.

வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் இந்தியர்களுக்கு வழிகாட்டுவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் நோக்கம் நல்லதாக இருப்பதால் நான் ஆதரவு வழங்குகிறேன். ஆகவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கணபதிராவ் தெரிவித்தார்.

இந்த முதலாளி நிகழ்வில் கட்சி பேதமின்றி பலர் அழைக்கப்பட்டுள்ளனர். ம.இ.கா, பெரிக்காத்மான் நேஷனல், ஜசெக, பிகேஆர் உள்ளிட்ட கட்சிகளின் இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த முதலாளி நிகழ்வில் காலை முதல் இரவு வரையில் வர்த்தக முகப்பிடங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் பூத் வேண்டுகிறவர்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொள்ளலாம். முதலாளி திட்டம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணபதிராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button