
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சலுகை திட்டங்கள் அனைத்து இனங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனடத்தோஸ்ரீ ரமணன் நன்றி-பாராட்டு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சலுகை திட்டங்கள்
அனைத்து இனங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனடத்தோஸ்ரீ ரமணன் நன்றி-பாராட்ட
புத்ரா ஜெயா, ஜூலை 23-
நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம. அறிவித்திருந்த ஆறு
அம்ச சலுகை திட்டங்கள் அனைத்து இன மக்களுக்கும் நலனை கொண்டு வந்துள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன் நன்றி பாராட்டினார்.
இதில் செப்டம்பர் முதல் ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1வெள்ளி 99 காசாக விற்பனைக்கு வருவது,
மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு சாரா திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தலா 100 வெள்ளி, டோல் கட்டணம் உயர்த்தப்படாதது, ரஹ்மா மடானி விற்பனை திட்டத்திற்கு 600 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு ஆகியவை அனைத்து இன மக்களுக்கும் நன்மையை கொண்டு வந்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு, இனம், மதம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களின் தலைவிதியைப் பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும் என்று துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன் சொன்னார்.
பண உதவி, இலக்கு மானியங்கள், வாழ்க்கைச் செலவுக் குறைப்பு முயற்சிகள் மற்றும் சாதனை அளவிலான முதலீடுகள் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை இந்திய சமூகம் உட்பட அனைத்து இன் மக்களின் தேவைகளுக்கான அரசாங்கத்தின் அக்கறையை பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் குறிப்பிட்டுள்ளார்.



