Malaysia

பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா ரம்லி ஙா தாலிப் பிறந்த நாள் சேவையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

 

பினாங்கு, ஆக.1-

பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா ரம்லி ஙா தாலிப் அவர்களின் 84ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் சிறந்த சேவையாளர்கள் பலருக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

 

சிம்பாங் அம்பாட் ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தான தலைவரும் , சிம்பாங் அம்பாட் ம.இ.கா கிளை தலைவரும் தாமான் செகார் கே.ஆர்.தி தலைவர் மற்றும் மாநில சுடர் ஒளி நற்பணி மன்ற தலைவருமான திரு. மு.வ.கலைமணி பக்கிரி PKT எனும் விருது வழங்கப்பட்டது.

 

இந்த விருதளிப்பில் PKT விருது பெற்றவர்களின் விவரங்கள் கீழ் வருமாறு. பத்து கவான் ம.இ.கா கிளை தலைவரும், முன்னாள் பினாங்கு மாநில ம.இ.கா செயலாளருமான திரு.எஸ்.ராமலிங்கம் ஆகியோருக்கு PKT விருது வழங்கப்பட்டது.

 

தாசேக் குளுகோர் தொகுதி ம.இ.கா தலைவரும் மாநில ம.இ.கா பொருளாளருமான திரு ச.பிரான்சிஸ்சுக்கு டி.ஜே.என் விருதும்

மாநில ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி இயக்க தலைவர் திரு.எம்.ஜி.குமார் பி.கே.தி விருதும்

பிரிமா பிராய் ம.இ.கா கிளை தலைவர் திரு தர்மலிங்கம் டி.ஜே.என் விருதும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி ம.இ.கா பொருளாளர் திரு. நாகராஜன் பி.கே.தி விருதும்

விரிவுரையாளர் டாக்டர் கணேசன் ஆறுமுகம் பி.கே.டி விருதும்

மாநில இந்திய பாரம்பரிய காலாச்சார சமூக நல இயக்க தலைவர் திருமதி சுமதி சுந்தராஜு பி.ஜே.கே விருதும் பிரிமா பிராய் ம.இ.கா கிளை துணைத்தலைவர் திரு.முருகன் பி.ஜே.கே விருதும்,

மாநில சிலம்ப போர் கலை இயக்க தலைவர் திரு.ஆர். கவி குமார் பி.ஜே.எம், விருதும் ஜூரு தமிழ் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த திரு.சந்திரசேகரன் பி.ஜே.எம் விருதும்

தாமான் இன்ராவாசெ ம.இ.கா கிளை துணை தலைவர் திரு.ஆ.பாஸ்கரன் பி.ஜே.எம் விருதும் தமிழ் மலர் பினாங்கு மாநில செய்தியாளர் திரு.தி.ஆர். மேத்தியூஸ்

டி. ஜே.என் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் பல இயக்கங்களை சேர்ந்த இந்திய சமூக சேவையாளர்கள் பலரும் விருதுகளை பெற்றனர்.

 

இதனிடையே,ச் விருதுப்பெற்ற அனைத்து தலைவர்களும் பெருமனம் கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்களுக்கு நன்றி மலர்களை காணிக்கையாக்குவதாக தெரிவித்தனர்.

 

அதனோடு கட்சி பேதம் பாராது நற்சேவைகளை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கியுள்ளது டத்தோஸ்ரீயின் அரசியல் முதுற்சியை காட்டுவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

 

விருது பெற்ற அனைவருக்கும் தேசம் டிவி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button