
தாய்லாந்து-கம்போடியா சமாதான முயற்சி: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமைக்கு அமெரிக்கா பாராட்டு!
வாஷிங்டன், டி.சி., ஆக.8-
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான மோதலைத் தணிக்கும் சமாதான முன்னெடுப்பில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய முக்கியப் பங்கிற்காக, அமெரிக்கா தனது முழு அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இது மலேசியாவின் இராஜதந்திர தலைமைத்துவத்திற்கு உலக அரங்கில் கிடைத்த ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் “டாமி” பிக்கோட், ஆகஸ்ட் 7 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தாய்லாந்து-கம்போடியா எல்லைக் குழுவின் கூட்டம் கோலாலம்பூரில் நடைபெற்றது ஒரு “ஆக்கபூர்வமான முதல் படி” என அமெரிக்கா கருதுவதாகக் கூறினார்.
“அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ரூபியோ, இரு அரசாங்கங்களும் தங்கள் உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றி, நீடித்த அமை



