
MIFA காற்பந்து போட்டியில் அலோர்காஜா தமிழ்ப்பள்ளி மீண்டும் மகத்தான வெற்றி படைத்தனர்!

தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்
அலோர் காஜா,செப்.4- மலாக்கா மாநிலத்திலுள்ள 21 தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட MIFA காற்பந்து போட்டியில் அனைத்து பள்ளிகளிலிருந்தும் 17 ஆண்கள் அணிகளும் 9 பெண்கள் களம் இறங்கினர்.
இருபிரிவுகளிலும் தனித்தனியே நடத்தப்பட்ட பலத்த போட்டியில் அலோர்காஜா தமிழ்ப்பள்ளி பெண்கள் பிரிவு முதல் நிலையில் வெற்றிப்பெற்று அனைத்துலக MIFA சுழல்கிண்ணத்தையும் வெற்றிக்கேடயத்தையும் தட்டிச் சென்றனர்.
மேலும் அலோர்காஜா தமிழ்ப்பள்ளியின் ஆண்கள் பிரிவினர் இரண்டாம் நிலையில் வெற்றிப்பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சியினை பள்ளிக்கு ஏற்படுத்தி தந்தனர்.பள்ளி மாணவர்களுக்கு சுமார் 2 மாதங்களாக முறையே பயிற்றுவித்த பயிற்றுனர் பூபதி , அலோர்காஜா தமிழ்ப்பள்ளியின் காற்பந்து பயிற்றுனர் கவிந்திரன் , பெற்றோர் பிரதிநிதி பயிற்றுனர் பிரபா , சிவபாலன் ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியர் திருமதி பார்வதி தமது உளமார்ந்த நன்றி மலர்களைக் காணிக்கையாக சமர்ப்பித்தார்.
இதனிடையே மாநில அளவில் வெற்றிப்பெற்ற அலோர்காஜா தமிழ்ப்பள்ளியின் 2 அணிகளும் தேசிய அளவில் நடைப்பெறவிருக்கும் MIFA அனைத்துலக காற்பந்து போட்டியிலும் கலந்து கொள்ளும் மகத்தான அரிய வாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.எனவே இதற்கான தொடர்ந்த ஆயத்த பயிற்சிகளை பயிற்றுனரிடமிருந்து முறையே கற்றுக்கொள்வதற்கான அடுத்தக்கட்ட திட்டங்களையும் தாம் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தருவதாக பள்ளியின் புறப்பாட நடவடிக்கை ஆசிரியர் ரேமன் உறுதியளித்தார்.



