Malaysia

பகடிவதையை ஒழிப்போம் ஜொகூர் மாநில சமய சொற்பொழிவு 9.0

 

ஜொகூர்,செப்.4-
ம.இ.கா ஜொகூர் மாநில சமயப் பிரிவின் ஏற்பாட்டில், ம.இ.கா லெடாங் பகுதி,
மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலத் தலைவர் ஆசிரியர் கழகம், மற்றும்
ஸ்ரீ சக்தி ஆசிரமம் தங்காக்க் ஆகியோரின் இணைப்பில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி 9.0 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற வழிகாட்டி, ஊக்கமளித்த மாநில
தலைவர் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு ரவீன் குமார்
அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

அதேபோல் நிகழ்வில் பங்கேற்று முழு ஆதரவை வழங்கிய ம.இ.கா லெடாங்
பகுதி தலைவர் ஆசிரியர் கதிர் அவர்களுக்கும் எங்களது நன்றி.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டத்தோ அசோஜன் ம.இ.கா தேசிய
துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, மதக் கல்வியின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அதேசமயம், அவர் பள்ளிகளில்
அதிகரித்து வரும் பகடிவதை (bullying) சம்பவங்களை மிக கவலையுடன்
பகிர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்திற்கு அரசாங்கமும்
சமூகமும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என
வலியுறுத்தினார்.

மேலும், ம.இ.கா ஜொகூர் மாநில தலைவர் YB ரவீன் குமார் தலைமையின் கீழ்
நடக்கும் இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமையாக இணைக்கும் முயற்சிகளாக இருப்பதையும், தொடர்ந்து முயற்சிகளாக இருக்க வேண்டும் என்றும் பாராட்டினார்.

ஸ்ரீ சக்தி ஆசிரம நிர்வாகம், சுவாமி மகேந்திரன், மாநில தலைமை ஆசிரியர்
கழக உறுப்பினர்கள், மற்றும் சமூக நலத்துறையினர்கள் ஆகியோரின்
ஒத்துழைப்புடன், சுமார் 150 பேர் பங்கேற்று இந்திய சமூக ஒற்றுமை
மற்றும் அதில் ம.இ.கா மாநிலம் வகிக்கும் பங்கு எனும் தலைப்பில் நடைபெற்ற
சொற்பொழிவை கவனமாக கேட்டறிந்தனர்.

இந்நிகழ்விற்கு ஆதரவளித்த ஆசிரம நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும்,
மற்றும் அனைத்து குழுவினருக்கும் ம.இ.கா ஜொகூர் மாநில சமயப் பிரிவு தலைவர் தொண்டர்மணி க.சேகரன் அவர்கள் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button