Malaysia

ஜாபின் பாரம்பரிய நடனம் , சாதனையைப் படைத்தது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது

மலாக்கா,அக்.6- மலாக்காவில் நடைப்பெற்ற அனைத்துலக சுற்றுலாத்துறை தினத்தில் ஜாபின் பாரம்பரிய நடனம் மற்றொரு புதிய சாதனையைப் படைத்தது. ஒரே நேரத்தில் 3,224 நடனக் கலைஞர்கள் நடனமாடிய பாரம்பரிய ஜாபின் நடனம் பலரின் வரவேற்பைப் பெற்றதோடு வெற்றிகரமாகவும் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஜாபின் நடனம் மலேசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த அங்கீகாரத்தை மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப் ரவூப் யூசோவிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன. இந்த உலக சுற்றுலா தினத்தில் (WTD) மற்றும் உலக சுற்றுலா மாநாட்டில் (WTC) 2025 உடன் இணைந்து கலந்து கொண்ட உலக பிரதிநிதிகளும் இந்த நடனத்தைப் பார்வையிட்டனர். இவ்விழாவின் போ 4 பாடல்களுக்கு நடனமாடிய ஜாபின் கலைஞர்கள் 20 நிமிடங்களுக்கு பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தனர். – தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button