Malaysia

மாணவர்கள் தங்கள் உண்மையான திறமையை வெளிப்படுத்த தைரியமாக இருக்க வேண்டும் அப்துல் ரவூப் அறைகூவல்

தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா,அக்.6- மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்த தைரியமாக இருக்க வேண்டும், இதனால் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த தலைவர்களாக மாறுவார்கள் என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோப் கூறினார். கடின உழைப்புடன் தைரியமாகச் செயல்படுத்துங்கள் என்ற உணர்வை, தங்களுக்குள் உற்சாகத்தை ஊட்டுவதற்கு உந்துதலாகப் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். “மிகப்பெரிய கனவுகளைக் காணத் துணிந்து, வெற்றியின் உச்சத்தில் கம்பீரமாக நிற்க கடினமாக உழைக்கும் தலைமுறையாக இருங்கள்”, என் முன் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன். நிச்சயம் ஒரு நாள் விஞ்ஞானிகள், வெற்றிகரமான தொழில்முனைவர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களாக உறுவெடுப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மலாக்கா மாநில அரசு, உள்ளடக்கிய விரிவான பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் கல்வித் துறையையும் மனித மூலதன மேம்பாட்டையும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. மேலும் இந்த முயற்சி மலாக்கா மற்றும் மலேசியாவின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது. அடுத்த தலைமுறை எதிர்காலத் தலைவர்களாக மாணவர்கள் முன்னேறுவதற்கு உற்சாகத்தை ஊட்டுவதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும், சிறந்த பயிற்சிக் களமாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button