
கரையான்களால் அரித்து சேதப்படுத்தப்பட்டு வரும் கோப்பெங் தமிழ்ப் பள்ளிக்கு அடுத்தாண்டு சீரமைப்பு பணி தொடங்கும்
கோப்பேங்,அக்.7. பேரா, கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறைகளில் கரையான்களால் அரித்து சேதம் அடைந்து கட்டடங்களை சீரமைக்கும் பணி அடுத்தாண்டு தொடங்கும் . இந்த விவகாரத்திற்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் tan kar hing தெரிவித்தார். சேதம் அடைந்துள்ள வகுப்பறைகளை சீர் செய்ய நிதி ஒதுக்கீட்டை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக கோப்பெங் லாவான் கூடாவில் உள்ள சமுக மண்டபத்தில் நடைபெற்ற கோப்பெங் மகளிருடன் தீப ஒளி பயணம் 2025 என்ற நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கடந்த 60 ஆண்டு கால பழமை வாய்ந்த கோப்பெங்கில் மாநகரில் உள்ள இப்பள்ளிக் கூடத்தில் 120 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள், அதில் 16 ஆசிரியர்கள பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளிக் கூட சூழ் நிலை மாணவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதை கல்வி இலாகா உணர்ந்து பழுதுகளை சீர் செய்து வந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது மலேசியா திட்டதின் கீழ் இந்த நிதி ஒதுக்கீட்டை செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி தொகையை அவர் வெளியிடவில்லை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிற்குப் பின்னர் அந்த நிதி விவரங்கள் வெளியிடப்படும் என்றார். இந்த நிகழ்வில் சிறார்களுக்கு வர்ணம் தீட்டும் நிகழ்வில் இந்தியர்களின் பாரம்பரிய பலகாரங்கள் செய்யப்பட்டு பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் முதியோர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏற்பாட்டுக் குழு சார்பில் பேசிய கோமதி சண்முகம் , இந்த நிகழ்வு இந்த தொகுதியில் அரசு சாரா மகளிர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆட்சிக் குழு உறுப்பினர் சண்ரா இங் , சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர். ஓங் சாய் இட் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்ததுடன் குத்து விளக்கை ஏற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.



