Malaysia

ஈப்போ லாஹாட் ஶ்ரீ மஹாலட்சுமி சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா அக்டோபர் 11 ஆம் தேதியன்று நடைபெறுகிது பூமதி தமிழ்ச்செல்வம் அழைக்கிறார்

ஈப்போ,அக்.7-ஈப்போ நகரத்தின் எழிலோடு அன்னை மஹாலட்சுமியின் தளமாகவும் பெருமாளின் சமய தளமாக விளங்கும் ஈப்போ லாஹாட் ஶ்ரீ மஹாலட்சுமி சமேத ஶ்ரீ சுந்தரராஜ‌ பெருமாள் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் அக்டோபர் 11 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக ஆலயத்தின் செயலாளர் பூமதி தமிழ்ச்செல்வம் தெரிவித்தார். திருவிழா அன்று கோமாதா பூஜை காலை 5 மணிக்கு தொடங்கும். அதனுடன், ஶ்ரீ மஹாலட்சுமி சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் மஹேஸ்வர பூஜைக்கு பின்னர் அனன்தானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதே நாளன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெறும். இந்த அற்புத நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து அருளை‌ பெற வேண்டும்‌ என அவர் கேட்டுக் கொண்டார். திருவிழாவை முன்னிட்டு புரட்டாசி மாதம்‌ முழுவதும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் வழிப்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் பக்தர்கள் பங்கேற்று ஓம் நாமோ நாராயணா நாமத்தை உச்சரித்து பெருமாளின் ஆசிர்வாதத்தை பெறலாம். இந்த புரட்டாசி‌ திருவிழாவை சிறப்பாக நடத்த எங்களுடன் கை கோர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறோம் என்றார். ஆலயத்தின் திருவிழாவிற்கு‌ பக்தர்களின் ஆதரவு வேண்டும். குறிப்பாக‌ நன்கொடை பொருளாகவோ பணமாகவோ வழங்க விரும்புவர்கள் ஆலயத்தின் தலைவர் தமிழ்ச்செல்வம் 019-512 8110 அல்லது பொருளாளர் சக்திதாசன் 011-6973 4354 என்பவர்களை தொடர்புக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button