
தமிழ் பள்ளிகள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி பாலமுரளிக்கு டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்
கோலாலம்பூர், ஆக 2-
கல்வி அமைச்சின் புதிய சிறப்பு அதிகாரியாக பாலமுரளி கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டிருப்பதால் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு காண உதவ வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
இந்த நியமனம் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியும் உச்சகத்தையும் தருகிறது. பாங்கி- காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த பாலமுரளி சிறந்த சமூக சேவையாளராகவும் இளம் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி பொறுப்புக்கு இவர் மிகவும் தகுதியானவர் என்பதில் ஐயமில்லை.
இந்நாட்டில் தமிழ் பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கல்வி அமைச்சும் அரசாங்கமும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
சகோதரர் பாலமுரளி தமிழ் பள்ளிகள் பிரச்சனைகள் குறித்து துணிகரமாக கல்வி அமைச்சின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டில் 26 தமிழ் பள்ளிகள் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது
இந்தப் பணிகளை இடம் மாற்றம் செய்யும் பணிக்கு அவர் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இது தவிர்த்து 150க்கும் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யவும் இவர் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்தப் பணிகள் மிகக் கடினமானவை என்றாலும் கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கத்திடம் முறையாக மகஜர்களை சமர்ப்பித்து அதற்கு விடிவுகாலம் பிறக்க பாலமுரளி போராட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கும் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவருமான டாக்டர் சுரேந்திரன் உறுதியளித்தார்.



