
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்! மஇகா நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது! கட்சித் தலைமை ரவீன்குமார், ருகேந்திரன், பன்னீர் செல்வம்,குமரன் ஆகிய வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது தேசம் அரசியல் களம் குணாளன் மணியம்
ஜொகூர்பாரு, ஜூன். ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஇகா நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் கட்சித் தலைமை ஒருவரை தவிர்த்து மூன்று புதிய களமிறக்கியுள்ளது. ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை ஜூன் 27ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்யவிருக்கின்றனர். ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி புதன்கிழமை மாலை வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இந்நிலையில் ம.இ.கா ஒருவரை தவிர்த்து மூன்று புதிய முகங்களை களமிறக்கியுள்ளது. புதிய முகங்கள் மக்கள் தேர்வாக அமையலாம் என்பதால் கட்சித் தலைமை புதிய முகங்களை தேர்வு செய்து களமிறக்கியுள்ளது. அதுவும் ஒருவரை தவிர்த்து மற்ற மூன்று வேட்பாளர்கள் புதிய முகங்களாவர். ம.இ.கா கெமெலா, கஹாங், பெர்லிங் மற்றும் புக்கிட் பத்து ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. கெமெலா தொகுதியில் ரவின் குமார் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மக்களுக்கு நன்கு அறிமுகமான ரவின் குமார் ஏற்கெனவே தெங்காரோ தொகுதியில் 2013 முதல் போட்டியிட்டு கடந்த மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில் ஒரு தவணையாக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அதேநேரத்தில் 2021 தொடங்கி 2024 வரை ம.இ.கா இளைஞரணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கஹாங்கில் புதிய முகமான ருகேந்திரன் போட்டியிடுகிறார். தொடர்ந்து பெர்லிங் தொகுதியில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். புக்கிட் பத்துவில் குமரன் போட்டியிடுகிறார். இவர்கள் மூவரும் இளைஞர்களாவர் என்பது கவனிக்க விஷயமாகும். இந்த தேர்தலில் தேசிய முன்னணி மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. அம்னோ, மசீச மற்றும் ம.இ.கா வேட்பாளர்கள் பட்டியலை பார்க்கும் போது ஓரளவுக்கு அனைவரும் தகுதி பெற்ற வேட்பாளர்களையே தேர்வு செய்துள்ளனர் என்பதால் இம்முறையும் நீள அலை வீசும் என்று எதிர்பார்க்கலாம்.



