Malaysia

கெஅடிலான் தொகுதி தேர்தல் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி தோல்வி பிகேஆர் அவசர கூட்டம்

கோலாலம்பூர் ஏப். 20-
கெஅடிலான் தொகுதி தேர்தலில் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உட்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச் சாட்டுகள் பற்றி விவாதிக்க பிகேஆர் மத்திய தலைமைத்துவம் வரும் புதன்கிழமை அவசரமாக கூடுகிறது.

தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தோல்வி அடைகிறார். ஆனால் அவரது அணி வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

சுற்றுச் சூழல் இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி, இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் அடாம், ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, அம்பாங், பத்து, பெட்டாலிங் செலாத்தான், சுங்கை பட்டாணி மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இம்முறை தோல்வி அடைந்தனர்.

செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் நிக் நஸ்மி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முடிவுகள் வெளிப்படையாகவும் மற்றும் நியாயமான தேர்தல் முறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சீர்த்திருத்த கட்சியான கெஅடிலானுக்கு வலிமை சேர்க்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இம்முறை முதல் முறையாக மின்னணு மூலமாக வாக்குகள் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button