DevotionalsMalaysia

பெனாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தை மாநிலப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் டத்தோ பால நம்பியார்

தேசம் செய்திகள் தி.கிரிஷன்

பெனாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தை மாநிலப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிப்பதற்காக கடந்த ஜூலை 21, செவ்வாய்க்கிழமை, ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ கோ. பால நம்பியார், பினாங்கு மாநில பாரம்பரிய ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றார். இதற்கு முன்னர், ஜூலை 13ஆம் திகதியன்று பினாங்கு மாநில பாரம்பரிய ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். 1886 முதல் 2026 வரை ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமையைத் தாங்கி நிற்கும் இத்திருத்தலத்தை மாநிலப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிப்பதற்காக, கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்பு, மேலும் அக்காலத்தைச் சான்றுபடுத்தும் பழமையான நாணயங்கள் போன்ற வரலாற்றுச் சான்றுகளை கூடுதல் ஆதாரங்களாக சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி, டத்தோ கோ. பால நம்பியார் அவர்கள், அப்பொருள்களை எடுத்துச் சென்று, கோம்தாரின் 18ஆம் மாடியில் அமைந்துள்ள பினாங்கு மாநில பாரம்பரிய ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 2023ஆம் ஆண்டு முதல், இத்திருக்கோயிலுக்கு பினாங்கு மாநிலப் பாரம்பரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் டத்தோ கோ. பால நம்பியார் அவர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button