Malaysiaசிறுகதை

என்னவள்

தருஷாயனியின் சிறுகதை, UPLOAD BY: KRISHAN THIVAGARAN

நள்ளிரவு மணி ஒன்றையோ இரண்டையோ தொட்டிருந்தது. சரியான மழை. “காவியா இன்னும் வீட்டுக்கு வரவில்லையே…” என்ற எண்ணத்தோடு, குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் வரவேற்பறையில் அலைந்து கொண்டிருந்தான் சிவா. தன் மகன் துருவன் இன்னும் தூங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். “துருவ், மணி ஆகிவிட்டதுபோய் தூங்கு,” என்றான் சிவா. “பாஅம்மா இன்னும் வரல… “அம்மாதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவாங்க. நீ போய்த் தூங்கு. நாளைக்கு ஸ்கூல் இருக்கு…” அப்பா சொன்னவுடன், துருவன் சோபாவில் இருந்த போர்வையால் தன்னைச் சுற்றிக்கொண்டு படுக்கையறையை நோக்கி நடந்தான். துருவன் தூங்கமாட்டான் என்பது சிவாவுக்குத் தெரியும். சிவா அறைச் சாளரத்தின் ஓரமாகத் துருவன் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அப்பா பார்த்ததை உணர்ந்த துருவன், கண்ணை இறுக மூடிக்கொண்டான். துருவனுக்கு இப்போதுதான் வயது 8… அப்பா நான் இல்லாமல்கூட தூங்கிவிடுவான்ஆனால் அம்மா இல்லாமல் ஒரு போதும் தூங்க மாட்டான் துருவ்அம்மா பையன்.அது என்னவோ தெரியவில்லை, பையன்களுக்கு அம்மா மேல் பாசம் கூடுதலாகத்தான் இருக்கும்நானேஅம்மா பையன் தான்அவன் எண்ண அலைகள் காவியாவை நோக்கித் திரும்பியது… “ச்சேமழை தூறாமல் இருந்திருந்தால்நானே காவியாவைப் பைக்கிலேயே பிக்அப் பண்ணியிருப்பேன்பைக்கில் போயிருந்தால் என்னோடு சேர்ந்து காவியாவும் மழையில் நனைந்திருப்பாள்…” என்று மனம் வருந்திப் புலம்பியவாறே சோபாவில் சாய்ந்தான் சிவாதிடீரென்றுசிவாவின் கைபேசி அலறியதுஎடுத்தான்காமி டாரி ஐபிடி.ஷா ஆலம்.. காமி மெண்டபாத்தி இஸ்தெரி என்சிக் டிபுனோ கெஜாம்என்சிக் செகெரா டாத்தாங் கெ ஐபிடி ஷா ஆலம்…” என்று கேட்டவுடன்சிவா அதிர்ந்து போனான்மழை பெய்தாலும்பரவாயில்லைஎன்று தன்பைக்மீதிதுஐபிடி ஷா ஆலம்  நோக்கிச் சென்றான். ஐபிடி ஷா ஆலம்வந்து அடைந்தான் சிவாதன் மனைவி காவியாவை கொலைப் பண்ணிருக்காங்க, அதைத் தொடர்பாக வந்திருக்கேன் என்று அங்கு இருந்த ஒரு துவானிடம் சொன்னான் சிவா. “கேஸ் இனி சேகரங் டிசியாசாட் ஒலெஹ் துவான் சந்திரன்…. என்சிக் தூங்கு செபெந்தார்…. கெஜாப் லாகி…. துவான் சந்திரன் டாத்தாங்….” என்று அவர் சொன்னவுடன், “தெரீமா காசே….” என்று சொல்லியவாறு சிவா காத்திருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்….. சிவாவை விசாரிக்க விசாரணை அறைக்கு கொண்டு சென்றார் துவான் சந்திரன். விசாரணை தொடங்கியது…… “உங்க மனைவி காவியாவை யாரோ கொடூரமா கொலைப் பண்ணிருக்காங்கஅதுபற்றி உங்களை விசாரிக்கணும் சிவா.” “சொல்லுங்க துவான் ,” மெல்லிய குரலில் கூறினான் சிவா. தன் மனைவி உயிரிழப்பு சிவாவை மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியிருக்கும் என்று துவான் சந்திரன் புரிந்துகொண்டார். “உங்க மனைவி காவியாவின் சடலத்தை நாங்க ஷா ஆலம் ஹோட்டலில் கண்டெடுத்தோம். போரென்சிக் ரிப்போர்ட் படி, யாரோ அவங்க வயிற்றுப் பகுதியில் கூர்மையான கத்தியால் குத்திருக்காங்க…. நைட் நியூஸ்ல வந்துச்சுபட், உங்க மனைவி கொலை பண்ணப்பட்டு 4 ஹவர்ஸ் அப்புறம்தான் நியூஸ் வந்துச்சு…. எங்க கணிப்புப்படி, நல்லா தெரிஞ்ச ஒரு ஆளுதான் உங்க மனைவியை ஹோட்டலுக்கு வர வைச்சு….. கொலைப் பண்ணிருக்காங்க…….” சிவா கண்ணோரம் கண்ணீர், அவனை அறியாமலே வழிந்தது……”சொல்லுங்கள் சிவா…. காவியா என்ன வேலை செய்கிறார்….. பாஸ்ட் பியூ வீக்ஸ் உங்க மனைவிக்கும் உங்களுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி இருந்துச்சு……..?” “துவான் …. காவியாலியோ கம்பெனிலே மேனேஜர் இருக்கா…. பாஸ்ட் பியூ வீக்ஸ்…. அவ வேலையில ரொம்ப பிஸி இருந்தா…. நான் ஆல் ஓகே வா கேட்டேன்ஒர்க் பிரஷர் என்று சொன்னாநானும் அவளுக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுத்தேன். ‘ஆல் ஓகே ஆகிரும்என்று சொன்னேன்.” “ஹ்ம்ம்…. நீங்க சொன்னதுல பார்த்தா…. காவியா கம்பெனிலே பதவில இருக்காங்க…..” “ஆமா துவான்,” என்றான் சிவா. “ஒரு வேலை அவுங்க மேல பொறாமைப்பட்டு, அவுங்களை யாராவது கொலை பண்ணிருக்க வாய்ப்பு இருக்கு….. கண்டிப்பா….. குற்றவாளியை….. கண்டுபிடிப்போம்,” என்றார் துவான்.சிவா வருத்தத்துடன் துவானை  பார்த்தான். “காவியாவே போன பிறகு குற்றவாளியைக் கண்டுபிடிச்சு என்ன பண்ணுறது…..?” என்று அவன் கண்கள் ஆயிரம் வார்த்தைகளை  துவானிடம் கேட்டது….. துவான் விசாரணையைத் தொடங்கினார். “சிவா, நீங்களும் காவியாவும் லவ் மேரேஜ் , இல்ல அரேஞ்ச் மேரேஜ் ?”  “லவ் மேரேஜ் துவான் …… ஆரம்பத்துல வீட்டுல நிறைய பிரச்சனை தான்….. அப்புறம் ஏற்றுக்கிட்டாங்க…..” “ஏன் பிரச்சனை?” “லவ் ங்க….. லவ் நாலே…. பிரச்சனைதான்….” என்று சோர்ந்த நிலையில் சொன்னான் சிவா. “புரியுற மாதிரி சொல்லுங்க சிவா….” “நானும் காவியாவும் எஸ்.தி.பி.ம் படிக்கும் போதே லவ் பண்ணுனோம்அவ  குடும்பம் ஸ்ட்ரிக்ட்….படிக்குற வயசுல லவ் பண்ணக்கூடாது என்று சொல்லித்தான் இருந்தாங்க…. இருந்தாலும் குடும்பத்துக்கு தெரியாம 6 வருஷம் என்னைய  லவ் பண்ணுனாஅவ என்னவள் ங்க.” அது என்னதுதெரியலகுடும்பத்துக்கு தெரியாம என்னை லவ் பண்ண பிடிச்சிருக்கு அவ சொல்லுவாங்க….. அவ வீட்டுல… “படிபடி…” ரொம்ப பிரஷர் பண்ணுவாங்க….  எஸ்.தி.பி.ம் டைம் காலேஜ் முடிஞ்சா பிறகு என்னை பார்க்க வருவா…. அப்படித்தான்…. எங்க காதல் மலர்ந்துச்சு…. காவியா நல்லா படிப்பாங்க….. படிச்சு டிப்ரெஷன் ஆனா, அவ எனக்குத்தான் கால் பண்ணுவா எமோஷனல் சப்போர்ட்டுக்கு…. நான்தான் பேசுவேன். அப்புறம் நான் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன்…. எனக்கு படிப்பில் பெரிய ஈடுபாடு இல்ல….. அது விடுங்க…. அப்படியே நாட்கள் போச்சுங்க…. அவள் படிச்சு யூனிவர்சிட்டி போயிட்டா…. நல்லா படிச்சா…. யூனிவர்சிட்டி முடிச்சு வேலைக்கும் போயிட்டா….. அப்படியே எங்க காதலை வீட்டுல சொல்லலாம்னு இருந்த…. அப்புறம் கல்யாணப் பேச்சு அவங்க வீட்டுல எடுத்தாங்க…… அவங்க அப்பா நிறைய வரன் பார்த்தாரு….. காவியா ஒரு நாள் எங்க லவ் பற்றி அப்பா கிட்ட சொன்னாள்….. “பையன் என்ன பண்ணுறான்?” “அப்பா, அவர் கிளாங்க்ல சூப்பர்வைசரா இருக்காரு.” “என்னது? கிளாங்க்ல வேலை செய்யுறானா?” “ஆமாப்பா.” “இதுபாரும்மா, நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. அம்மாவும் அப்பாவும் உன் தகுதிக்கு ஏற்ற பையன்தான் பார்ப்போம்.” “என்னப்பா, ஸ்டேட்டஸ் பாக்குறீங்களா?” “காதல் உன் கண்ணை மறைச்சுருச்சு….. மறந்திடு…. நான் உன் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஒரு பையன் பாக்குறேன்.” சிவா ரொம்ப நல்ல பையன், என்னை நல்லா பார்த்துக்குவான்,” என்று காவியா சொன்னாள். “அவனைவிட உன்னை நன்றாக பார்த்துக்கொள்ளும் ஒருவனை நான் பார்க்கிறேன்,” என்று அவளின் அப்பா பதிலளித்தார். “நான் கட்டினால் சிவாவைத்தான் கட்டுவேன். என் நெற்றியில் அவன் கையால் குங்குமம் வேண்டும். இல்லையெனில் உங்கள் கையால் என் தலையில் எண்ணெய் வையுங்கள்,” என்ற அவளின் உறுதியால், காவிய அப்பா மனமுருகி திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் திருமண நாளில் காவியாவின் பெற்றோருக்கு முழு சம்மதம் இல்லை என்பதை முகபாவனைகளிலிருந்து சிவா உணர்ந்தார். அப்போது துவான்  சிவாவிடம் கேட்டார், “உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் சம்மதமா?” “எனக்கு யாரும் இல்லை. நான் பள்ளியில் இருந்தபோது என் அம்மா, அப்பா கார் விபத்தில் இறந்துவிட்டார்கள். பிறகு உறவினர்கள் வளர்த்தனர். 21 வயதில் தனியாக வாழ ஆரம்பித்தேன்.” “புரிகிறதுஒத்துழைத்ததற்கு நன்றி சிவா  ,” என்று துவான் கூறினார்.அதே நேரத்தில் சைபர் டிஜிட்டல் பிரிவிலிருந்து செய்தி வந்ததுசம்பவ இடத்தில் கிடைத்த மொபைல் போனின் லாக் வெற்றிகரமாக திறக்கப்பட்டிருந்தது. “போன் லாக் திறந்துவிட்டது. உடனே வந்து எடுத்துக்கொள்ளலாம்,” என்ற தகவல் கிடைத்ததும் துவான் அவசரமாக அந்த இடத்துக்கு சென்றார். போனை கையில் எடுத்தவுடன், அதிலிருந்த அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள உரையாடல்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்பொழுது காவியா புலனத்தில் இரு நபர்களுடன் வேலையிடத்தில் அண்மையில் நெருங்கிய தொடர்பில் இருந்தாள். அவர்களை விசாரிக்க துவான் அழைத்தார். முதலில், ரமேஷை விசாரிக்க அழைத்தார் துவான். விசாரணை தொடங்கியது….”சொல்லுங்க ரமேஷ், காவியாவுக்கு நீங்க யாரு?” “ஒரே வேலை எடுத்துள்ள செய்யுறகொலீக்.” “அது எங்களுக்கு தெரியும். அதைத் தாண்டி எதாவது உங்களுக்கு உள்ளதா?””துவான், காவியாவுக்கு கல்யாணம் ஆச்சு. அதையும் தாண்டி எங்களுக்குள்ள என்ன இருக்கு?” “இங்க பாருங்க, நீங்க சேட் பண்ணுன மெசேஜ் எங்ககிட்ட தான் இருக்கு. நீங்க காவியாவை விரும்பல?” “சொல்லுங்க ரமேஷ்…..” “இல்லவிரும்பல….. சொல்லுறேன்…. காவியா எங்க மேனேஜர். பாக்க அழகா இருப்பாங்க. அவங்களை லவ் பண்ணுனா, அவங்க காசு எனக்கு கிடைக்கும், நல்லா வாழலாம் நெனைச்சு நான் அவங்ககிட்ட ட்ரை பண்ணுனேன். அப்போ அப்போ அவங்களுக்கு மெசேஜ் பண்ணுனேன். ஆனா அவங்க என்னைக் கண்டுக்கல.” “அதனால நீ காவியாவை கொலை பண்ணிட்டியா?” “துவான், அதுக்காக நான் ஏன் கொலை பண்ணுவேன்? காவியா இல்லேன்னா திவ்யாநான் கொலை பண்ணல…” “சரி, போங்க ரமேஷ். எதாவது விசாரணைக்கு இருந்தா கூப்பிடுவோம்.” அடுத்து, காவியா அண்மையில் தினேஷ் உடன் அதிகம் தொடர்பு கொண்டு இருந்ததால், காவல் அதிகாரி விசாரணைக்கு தினேஷை அழைத்தார். “சொல்லுங்க தினேஷ், நீங்க காவியாவுக்கு யாரு?” “காவியா என்னோட மேனேஜர். நான் சாதாரண கிளார்க்.” “அவ்வளோதானா?” “ஆமா துவான் அவ்வளோதான்.” “தினேஷ்நான் உங்களுக்கும் காவியாவுக்கும் உள்ள செட்டிங்கைப் படிச்சிட்டேன். இதுக்கு அப்புறமும் உண்மையை என்கிட்ட சொல்லுறீங்களாஇல்லையா?” “சரி, துவான் சொல்லுறேன். நானும் காவியாவும் லவ் பண்ணுனோம்.” “காவியாவுக்கு கல்யாணம் ஆச்சுன்னு தெரியுமா?” “தெரியும் துவான்.” “காவியாவும் என் மேல ஆசைப்பட்டாங்க.” “எப்படி? அவங்க கணவன் காவியாவை நல்லா பார்த்துக்கிட்டாருன்னு சொன்னாங்க. அதைத் தாண்டி ஏன் உன்னை லவ் பண்ணுனாங்க?” “ஆரம்பத்துல சிவா நல்லா பார்த்துக்கிட்டாரு. ஆனா, அவங்க பையன் பிறந்த உடனே ரிலேஷன்ஷிப்ல பெரிய ஈடுபாடு காட்டுறது இல்லன்னு சொன்னாங்க.” “கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.” “ஆரம்பத்துல நல்ல கணவராத்தான் இருந்தாரு. ஆனா, எப்போ பார்த்தாலும் பிரச்சனைனா எமோஷனல் சப்போர்ட் தான் கொடுப்பாரு. அது காவியாவுக்கு போரடிச்சுருச்சு.” “அப்படி நீ என்ன பண்ணுவீங்க, தினேஷ்?” “நானும் காவியாவும் ஒண்ணா இருந்திருப்போம். அவங்க கணவருக்கு தெரியாம ஓவர்டைம் ஒர்க்னு சொல்லிட்டு என்கூட ஹோட்டல்லாம் வந்திருக்காங்க.” “கள்ளக் காதல் அப்படித்தானே?” “புரிஞ்சுக்கிட்டீங்களே.” அப்போ, காவியாவை நீதான் ஹோட்டல்ல கொலை பண்ணுனா? அந்த மெசேஜும் நீதான் காவியாவை ஹோட்டலுக்கு கூப்பிட்டிருக்க.” “ஆமா துவான். ஆனா, நான் கொலை பண்ணல. அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா…” “காவியாவுக்கு ஒரு கட்டத்தில் கணவனுக்கு துரோகம் பண்ணுற மாதிரி பீல் ஆச்சு. அதை என்கிட்ட கால் பண்ணி, ‘இதோட முடிச்சிக்கலாம். என்ன இருந்தாலும் அவர் கணவர்தான் முதல் காதல்ன்னு சொன்னாங்க.” “சரி, நானும் பொழைச்சிப் போகட்டும்னு கடைசியா என்கூட இருக்க ஹோட்டலுக்கு கூப்பிட்டேன். காவியா முதலிலே மறுத்தாங்க. நான் அவங்க கணவனிடம் நம்ம இரண்டு பேருக்கும் கள்ளக் காதல் இருந்ததை சொல்லிடுவேன்னு சொன்னேன். அப்புறம் அவ ஹோட்டலுக்கு வரேன்னு சொன்னாங்க.” “அங்க நான் வந்தேன். அப்பொழுது ஏன் தெரியல, அங்க சரியா சிக்னல் கிடைக்கல.” “தினேஷ்அது அப்படித்தான் இருந்துச்சு. அதனாலதான் குற்றவாளியை எங்களால கேமராவுல பார்க்க முடியல.”என்றார் துவான். “…””நான் ஹோட்டலுக்கு வந்த உடனே பிரெஷ் ஆப் ஆக குளிக்கச் சென்றேன். அப்போ குளிச்சு முடிச்சு வரும்போது, காவியா இரத்தக் கரையா என் ரூம்ல இருந்தாங்க. எனக்கு பதற்றத்துல என்ன பண்றதுன்னே தெரியலஅங்க இருந்து வெளியாகித்தேன்.” அப்பொழுது, போரென்சிக் துறையில் இருந்து அழைப்பு வந்தது…. சம்பவ இடத்தில் காவியா இரத்த கரையில் முடி கண்டுபிடிக்கப்பட்டது. அது காவியாவின் முடி இல்லைரமேஷ், தினேஷின் முடியும் இல்லைஅப்பொழுதுதான் தெரிந்தது அது சிவாவின் முடி…. ஹோட்டல் வாசலிலும் சிவாவின் முடிகள் கண்டுபிடிக்கப்பட்டது. துவான் சந்திரன் போலீஸ் வாகனம் மூலம் சந்திரன் வீட்டை நோக்கி சென்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button