
டாமன்சாராவில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவருக்கு எதிரான வழக்கில் சுரேஷ் வெற்றி
கோலாலம்பூர்:
டாமன்சாராவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவருக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளதாக சுரேஷ் கூறினார்.
இந்த ஆலயத்தின் திருப்பணிக்காக 3 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கியிருந்தேன். ஆனால், ஆலய திருப்பணி நடக்காததால் நான் வேள்வி எழுப்பினேன்.
இதனால் ஆலயத் தலைவர், அவரின் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி என் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டது. இதில் நான் அவர்களை மிரட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் பெட்டாலிங் ஜெயா போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் பேச அழைத்தனர். சமரசம் பேசிய பிறகு அவர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே என்னை திட்டித் தீர்த்தனர். நானும் பதிலுக்கு திட்டினேன்.
இந்நிலையில் ஆலயத்தலைவரின் மனைவி நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக போலீஸ் புகார் செய்தார். நானும் பதிலுக்கு புகார் செய்து விட்டு இது தொடர்பாக வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கு விசாரணை 2020 முதல் 2023ஆம் தேதி வரை பெட்டாலிங்ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டு காலம் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் என் சார்பில் வழக்கறிஞர் டத்தோ கீத்தன் ராம் வின்சன் ஆஜரானார். இந்த வழக்கில் நான்கு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். இதில் தற்போது தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த வழக்கை செவிமடுத்த நீதிபதி என் மீது கொடுக்கப்பட்ட புகாரில் எந்தவொரு அடிப்படையும் இல்லை என்று அறிவித்து வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.
என் மீதான வழக்கில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகையால் நான் கொடுத்த நன்கொடை குறித்து கேள்வி கேட்பேன். அத்தொகை என்னவானது?
ஆலயம் எப்போது கட்டப்படும்? அதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் தர வேண்டும். இதுவே தனது கோரிக்கை என்று சுரேஷ் கூறியுள்ளார்.



