CinemaIndiaInternational

இந்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்பினார் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றம் சமூக வலைத்தளங்களில் புலம்பல்

இந்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்பினார் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றம் சமூக வலைத்தளங்களில் புலம்பல்

புக்கிட் ஜாலில்,ஜன.29-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி படைக்க வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பாடியதால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

ஏர்.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி என்பதால் அதிக எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் வந்திருந்தனர். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ச்சியாக பல இந்திப் பாடல்களை பாடியதால் தாங்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்ததாக ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலாலம்பூரின் நிகழ்ச்சி படைக்க வந்த நிலையில் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பது ரசிகர்களின் டிக்டாக்கில் அவர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்கள் வழி தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே 90ஆம் ஆண்டு பாடல்கள் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் புலம்பித் தள்ளி விட்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியது ஏன்? DMY்நிறுவனம் பாடல்கள் குறித்து அவரிடம் விவாதிக்கவில்லையா? இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார்கள். ஆனால், 8.30 மணிக்கு தொடங்கியது. இதற்காகவா மக்கள் 5 மணிக்கெல்லாம் ஸ்டேடியம் வந்தார்கள்? இரண்டு மணிநேரம் மலேசிய கலைஞர்களை பயன்படுத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை என்று ரசிகர்கள் புலம்பித் தீர்த்தனர்.

மொத்தத்தில் மூன்று மணிநேரம் மலேசிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கியதோடு அக்சியாத்தா அரங்கில் கூடியிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆட்டம் போட வைத்த Hearts of Harris இசை நிகழ்ச்சி சூப்பர் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button